சுங்கை புசார் இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தொடங்கி பாதிதூரம் கடந்துள்ள வேளையில், அங்கு பிஎன் 2013-இல் பெற்றதைவிட இம்முறை கூடுதல் ஆதரவைப் பெறும் என்று தோன்றுகிறது.
மலேசியாகினி மேற்கொண்ட ஆய்வுகளில் 60விழுக்காட்டு மலாய்க்காரர் வாக்குகள் பிஎன்னுக்குச் செல்லும் என்பது தெரிய வந்துள்ளது. சீனர்களிடமும் அதற்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கலாம்.
எஞ்சியுள்ள 40 விழுக்காட்டு வாக்குகளில் பெரும்பகுதி பாஸுக்குத்தான், ஏனென்றால் அதுதான் அமனாவைவிட வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமான கட்சியாக விளங்குகிறது.
அமனா செகிஞ்சானில் மட்டும், அதுவும் டிஏபியுடன் கூட்டணி வைத்திருப்பதால், கணிசமான வாக்குகளைப் பெறலாம். அங்கு முன்பு பக்கத்தான் ரக்யாட்டில் இருந்ததால் பாஸுக்குக் கிடைத்த சீனர் வாக்குகள் இம்முறை அமனாவுக்குக் கிடைக்கலாம்.
கடலோரமாக அமைந்துள்ள சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று சுங்கை பாஞ்சாங். இது அம்னோ வசமுள்ளது, (சுங்கை புசார் வேட்பாளர் புடிமான் முகம்மட் ஸோதிதான் அதன் சட்டமன்ற உறுப்பினர்). மற்றது டிஏபி-இன் வசம்.
சுங்கை புசாரில் 42,836 பதிவு செய்த வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 26,000 பேர் மலாய்க்காரர்கள். சீன வாக்காளர்கள் 13,142 பேர்.
வெற்றி பெற கூடாது என்று நினைத்தாலும் பாரிசான் தான் வெற்றி பெரும்! நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை! தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளுக்கு ஒரு நன்றி சொல்லலாம்! அவ்வளவு தான்!
மக்கள் மாக்களாக இருக்கும் போது என்ன நடக்கும்?
பி.என். வெற்றி பெற்றால் வியப்பதற்கு ஒன்றுமில்லை ! ஆனால் இரண்டாவது இடம் யாருக்கு என்பதில் தான் நமக்கு அக்கரை.