மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (Mavcom) ரயானி ஏர் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்துச் சேவை (ஏஎஸ்எல்) நடத்த வழங்கப்பட்டிருந்த உரிமத்தை இரத்துச் செய்தது.
ரயானி ஏர், விமானப் போக்குவரத்துச் சேவை நடத்துவற்கான நிபந்தனைகளை மீறி விட்டதாகவும் ஒரு வர்த்தக விமான நிறுவனமாக தொடர்ந்து இயங்க போதுமான நிதி வசதியோ நிர்வாகத் திறனோ அதனிடம் இல்லை என்றும் அந்த ஆணையம் இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
“அதன் விளைவாக ரயானி ஏர் இன்று தொடங்கி ஒரு வர்த்தக விமான நிறுவனமாக செயல்பட முடியாது”,என்று அந்த அறிக்கை கூறிற்று.
“ரயாணி” நீங்கள் வளைந்து கொடுக்கவில்லை என்று தெரிகிறது! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! இங்கு இல்லை என்றாலும் வேறு இடத்தில் வெற்றி பெறுவீர்கள்!
தமிழில் பறந்ததால் கிடைத்த தண்டனையா ?
விழுமுன் எழு ! மீண்டும் தலை நிமிர்ந்து நில் !! சரிவு நிரந்தரம் அல்ல ..!!
தமிழன் சகமட்டன் எழுந்து வருவான் நிச்சயம் ஒரு தமிழ் சொல் வரும். விழுவது எழுவது என்று நம் ஆசான் ஆதி. குமணன் சொன்ன வாக்கியம். எழுவோம் மறுபடியும் உன்னால் தமிழா ரயானி மறுபடியும் வரும் தமிழா. உன் முயற்சி மறுபடியும் வெற்றியெ
.
ரயானி ஏர் வெற்றியுடன் மீண்டும் சேவையில் ஈடுபட வேண்டும். தமிழர் என்ற நிலையில் அணைத்து மலேசியர்களும் உள்ளடக்கிய நிறுவனமாக செயல்பட்டால் நிச்சயம் மீண்டும் செயல் வடிவம் பெறலாம். மற்ற தனியார் விமான செயல்பாடு முறையில் இயங்கினால் மீண்டும் ரயானி ஏர் வானில் பறக்கும்.அணைத்து மலேசியர்களும் வரவேற்பு நல்குவர்.