சமயம், இனம், கல்வி ஆகியவற்றை அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவற்றைக் கலக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ் கூறினார்.
ஆஸ்ட்ரோ அவானியில் ஹரித் இஸ்கண்டரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரபிடாவிடம் ஹுடுட் பற்றி வினவியபோது அவர் இவ்வாறு கூறினார்.
“நான் எப்போதும் சொல்வது இதுதான், சமயத்தை அரசியலுடன் பிணைக்காதீர்கள். . அரசியல் என்பது சமயம், இனம், கல்வி சம்பந்தப்பட்டது அல்ல……இப்படி அரசியலாக்கக் கூடாது”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
“அவற்றை அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும். அம்மூன்றுக்கும் அரசியலுடன் எந்தத் தொடர்புமில்லை.
“அவற்றை அரசியலாக்குவது தப்பு”, என்றாரவர்.
அம்மா ரபிடா நீங்கள் பண்ணியதை தான் இப்போது இந்த ஈன ஜென்மங்கள் உங்களை விட திறமையுடன் செய்கின்றனர்– உங்களை சப்பிக்கொண்டிருக்கும் MIC MCA ஈன ஜென்மங்களின் ஆதரவுடன் உங்களின் எலும்பு துண்டுக்காக.
இது தானே உங்களின் பொழுது போக்கு ????
இப்ப, நீங்கள் உங்கள் கருத்தைத் தாராளாமாகச் சொல்லலாம்! இப்போது பதவியில் இருப்பவர்கள், அவர்களும் பென்ஷன் வாங்கும் போது தங்களது கருத்தை நீதியோடும், நியாத்தோடும் சொல்லுவார்கள்! நாங்களும், நீங்கள் சொல்லுவதைக் கேட்டும் ரசித்தும் மகிழ்கிறோம்!