ஷாபியை மனித உரிமை தூதராக நியமித்த அரசாங்கம் சுஹாகாமைக் கவனிக்கவில்லை

shafeeவழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லா  மலேசியாவின்  மனித  உரிமை  தூதராக   நியமிக்கப்பட்டிருப்பதைச்  சாடிய  சுவாராம்,  அவர்  எக்காலத்திலும்  மனித  உரிமைகளுக்காகப்  போராடியவர்  அல்ல  என்று  கூறியது.

அரசாங்கம்  மனித  உரிமைகள்மீது  உண்மையிலேயே அக்கறை  கொண்டிருந்தால்,  மலேசிய  மனித  உரிமை  ஆணையம்(சுஹாகாம்)  கடந்த  சில  மாதங்களாக  ஆணையர்கள்  இல்லாமல்  இருக்கும்படி   விட்டு  வைத்திருக்காது, அந்த  ஆணையத்துக்கான  நிதிகளையும்  வெகுவாகக்  குறைத்திருக்காது.

“தொடர்ந்து  நிகழும்  மனித  உரிமை  மீறல்களும்,   பேச்சுரிமையும்  மற்ற  உரிமைகளும்   ஒடுக்கப்படுகின்ற  நிலையும்  மலேசிய  அரசாங்கத்துக்கு  மனித  உரிமைகளைக்  காக்கும்  கடப்பாட்டில்  கிஞ்சிற்றும்  அக்கறை  இல்லை  என்பதைத்  தெளிவாகக்  காட்டுகின்றன.

“மலேசிய  அரசாங்கம்  மலேசியாவில்  மனித  உரிமைகளைக்  காக்க  உண்மையிலேயே  கடப்பாடு  கொண்டிருந்தால்,  இதற்குள்  சுஹாகாமுக்குப்  புதிய  ஆணையர்களை  நியமித்திருக்கும்,  சுஹாகாமுக்கான  நிதி  ஒதுக்கீட்டைக்  குறைக்காமல்  கூட்டியிருக்கும்”, என  சுவாராமின்  அறிக்கை  கூறியது.