“அசுத்தமான” இந்துக்கள் என்ற அதன் கூற்றை யுடிஎம் திருத்திக்கொள்ளும்

 

UTMdirtyhindusயூனிவர்சிட்டி டெக்னோலஜி மலேசியா (யுடிஎம்) அதன் போதனை திட்டத்தில் இந்து மற்றும் சீக்கிய சமயங்கள் பற்றிய தவறான கூற்றை திருத்திக்கொள்ளும் என்றும் துணைக் கல்வி அமைச்சர் கூறுகிறார்.

தவறுகள் இருப்பதை அப்பல்கலைக்கழகத்தின் உதவி-வேந்தர் ஒப்புக்கொண்டார் என்றும் அவை விரைந்து திருத்தப்படும் என்று அவர் கூறியதாக கமலநாதன் தெரிவித்தார்.

தயவு செய்து இவ்வாறான தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் தாம் அவரை கேட்டுக் கொண்டதாகவும், ஏனென்றால் அவை குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதோடு மாணவர்களில் சில பகுதியினரை புண்படுத்தும் என்பதோடு அவை உண்மையானவையல்ல என்றும் தெரிவித்ததாக கமலநாதன் கூறுகிறார்.

யுடிஎம்மின் உதவி-வேந்தர் தாம் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஒப்புக்கொண்டதாக கமலநாதன் அவரது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.

இந்த விவகாரம் யுடிஎம்மின் சின்னத்தோடு சமூக ஊடகங்களில் வெகுவாக பரவியதைத் தொடர்ந்து மேற்கூறப்பட்ட நடவடிக்கை எழுந்துள்ளது.

அப்போதனை பயிற்றிகளில் இந்துக்கள் “அசுத்தமான”வர்களாக இருக்க விரும்புகின்றனர் என்றும், அந்த முன்னாள் இந்துக்களுக்கு இஸ்லாம் “வாழ்க்கையின் நன்நடத்தைகளை” கற்றுத் தந்ததாகவும் யுடிஎம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது.

இந்து சமயத்தைப் பின்பற்றும் சிலர் உடலை அசுத்தமாக வைத்திருப்பதை ஒரு சமயச் சடங்காகவும், அது அவர்களை வீடுபேற்று நிலைக்கு இட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர் என்று அப்பாட பயிற்றிகளில் கூறப்பட்டுள்ளது.

இன்னொன்றில், சீக்கிய சமயம் இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களின் இணைப்பாகும் என்றும், அதைத் தோற்றுவித்தவர் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இவை அனைத்தும் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரிகம் என்ற பாடத் திட்டத்தின் ஓர் அங்கம் என்று நம்பப்படுகிறது. பொதுப்பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இது கட்டாயப்பாடமாகும்.