மஇகா: ‘அசுத்தமான இந்துக்கள்’ என்று குறிப்பிட்ட யுடிஎம்-மை தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிப்பீர்

velயுனிவர்சிடி டெக்னோலோஜி  மலேசியா (யுடிஎம்)வின்  பாடக் குறிப்பு  விவகாரத்தில் போலீஸ் அப்பல்கலைக்கழகத்தின்மீது   தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ்   விசாரணை செய்ய வேண்டும்  என்று  மஇகா தலமைப் பொருளாளர் எஸ்.வேள்பாரி கோரிக்கை   விடுத்துள்ளார்.

“சமய, இன  உணர்வுகளை அவமதிப்போரைப்  பொறுத்துக்கொள்வதற்கில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் பலதடவை எச்சரித்துள்ளார்.

“இந்துக்களினதும் சீக்கியர்களினதும் உணர்வுகள் எப்படிக் காலில்போட்டு மிதிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது அப்பட்டமான ஒர் எடுத்துக்காட்டு.

“இதற்குக் காரணமானவர்கள் மலேசியாவின் வருங்காலத் தலைமுறைகளை உருவாக்குபவர்கள் என்பதுதான் இன்னும் வேதனை அளிக்கும் விசயமாகும்”, என வேள்பாரி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

பாடத் திட்டக் குறிப்பில் “தவறுகள்” நேர்ந்து விட்டதாக யுடிஎம் துணை வேந்தர் கூறுவதை ஏற்பதற்கில்லை.

பாடத்திட்டக் குறிப்பு பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பல்கலைக்கழகக் கல்வியாளர்களால் சரிப்பார்க்கப்பட்டதா அல்லது அங்கும் கவனக் குறைவு நிகழ்ந்து விட்டதா என்றும் அவர் வினவினார்.