கடந்த மாதம் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் ஒரு விருதைப் பெறுவதற்காக தனி ஜெட் விமானம் ஒன்றில் இஸ்தான்புல் சென்றுவர எவ்வளவு செலவானது என்பதை வெளியிடும் துணிச்சல் உண்டா என பாண்டான் எம்பி ரபிசி ரம்லி பிரதமர்துறைக்குச் சவால் விடுத்தார்.
ரபிசி, அந்த ஜெட் விமானத்தை வாடகைக்கு அமர்த்த ரிம1.44மில்லியன் ஆகியிருக்கலாம் என மதிப்பிட்டிருந்ததை ரோஸ்மாவின் உதவியாளர் ரிஸால் மறுத்ததை அடுத்து இப்படி ஒரு சவாலை விடுத்தார்.
அந்த விமானம் ஒரு மணி நேரத்துக்கு ரிம60,000 என்று பேசி குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கலாம்.
“அதன்படி பார்த்தால் ரோஸ்மா சுபாங்கிலிருந்து இஸ்தான்புல் சென்றுவர குறைந்தது 24மணி நேரம் ஆகி இருக்கலாம். அதற்கு வரி செலுத்துவோரின் பணம் ரிம1.44 மில்லியன் செலவிடப்பட்டிருக்கும்”, என்று ரபிசி கூறினார்.
“இது தவறு என்றால் பிரதமர்துறை முன்வந்து வரிசெலுத்துவோர் செலுத்திய சரியான தொகை எவ்வளவு என்பதைக் கூறிட வேண்டும்.
“மாதந் தோறும் இப்படி விமானம் வாடகைக்கு அமர்த்தப்படுவதாக நினைத்து அஞ்சுகிறேன். அதனால்தான் அதற்கு ரிம86 மில்லியன் செலவாகலாம் என்று மதிப்பிட்டிருந்தேன்”, என்றாரவர்.


























அறிவித்த பிறகு நீங்கள் அதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்! அதற்கு அவர்கள் சும்மாவே இருந்து விடலாம்!