வாக்காளர்கள் பிஎன்னுக்கு வெற்றி கிடைப்பதைத் தடுத்து சாலைக்கட்டணத்துக்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டும்

tunaiசுங்கை  புசார்,  கோலா  கங்சார்  வாக்காளர்கள்  ஜூன் 18  இடைத்தேர்தல்களில்  பிஎன்னுக்கு  வெற்றி   கிடைக்காதபடி  செய்து  சாலைக்  கட்டண  உயர்வுக்கெதிராக  தங்கள்  எதிர்ப்பைக்  காட்டிட வேண்டும்  என  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  வலியுறுத்தினார்.

பிஎன்  இவ்வாண்டில்  எட்டு  நெடுஞ்சாலைகளிலும்  அடுத்த  ஆண்டில்  நான்கிலும்   சாலைக்  கட்டணத்தை  அதிகரிக்க  திட்டமிடுகிறது  என  லிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“மக்கள்   சாலைக்  கட்டண  உயர்வை  விரும்பவில்லை  என்றால்  இரண்டு  இடைத்  தேர்தல்களிலும்  பிஎன்னை  நிராகரித்து  தங்கள்  கருத்தினை   அழுத்தமாக  தெரிவித்திட  வேண்டும்.

பிஎன்னுக்கும்  பக்கத்தான்  ஹராபானுக்குமுள்ள  வேறுபாடு  என்னவென்றால்,  பிஎன்  சாலைக் கட்டணத்தை  வைத்துக்கொள்ளவும்  அதை  அதிகரிக்கவும்  விரும்புகிறது. பக்கத்தானோ  வடக்கு- தெற்கு  நெடுஞ்சாலையில்  சாலைக்  கட்டணத்தை  எடுத்துவிட  நினைக்கிறது  என  குவான்  எங்  கூறினார்.

சாலைக்  கட்டணம்  உயர்த்தப்படக்கூடிய  12  நெடுஞ்சாலைகளில்  ஏழு  சிலாங்கூரில்  உள்ளது