யுடிஎம் பாடக் குறிப்பில் தவறு செய்தவர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்: சீக்கியர்கள் ஆவேசம்

sikhயுனிவர்சிடி  டெக்னோலோஜி  மலேசியா(யுடிஎம்)வில்  இந்து  சமயத்தையும்  சீக்கிய  சமயத்தையும்  கற்பிப்பதற்குப்  பயன்படுத்தப்படும்  பட  வில்லைகளில்  தவறான  தகவல்கள்  இடம்பெறக்  காரணமானவரைப்  பணிநீக்கம்  செய்ய  வேண்டும்  என்று  மலேசிய  தேசிய   சீக்கியர்  இயக்கம்(கெராக்சீக்)  கோரிக்கை  விடுத்துள்ளது.

கெராக்சீக்   யுடிஎம்மின்  பாடக்  குறிப்பில்  சீக்கிய  சமயம்  பற்றி  “தவறான  தகவல்கள்” இடம்பெற்றிருப்பதாக  ஈப்போ  போலீஸ்  தலைமையகத்தில்  புகார்  செய்ததுடன்  சம்பந்தப்பட்டவர்  பொது  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்றும் வலியுறுத்தியது.

வரலாற்றை  மாற்றவும்  சீக்கிய  சமயம்  பற்றிய  அடிப்படை  உண்மைகளைத்  திரித்துக்  கூறவும்  முற்படும்  யுடிஎம்-இன்  செயல்  கண்டு  மலேசிய  சீக்கியர்கள்  ஆத்திரம்  கொண்டிருப்பதாக கெராக்சீக்கின்  தலைமைச்  செயலாளர்  அமர்ஜிட்  சிங்  கில்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

“இது  முற்றிலும்  தவறு”,  என்றாரவர்.