பல்கலைக்கழகங்களிலும் அறியாமை ஆட்சி செய்கிறதே: மஇகா தலைவர் ஆதங்கம்

MIC presidentயுனிவர்சிடி  டெக்னோலோஜி  மலேசியா(யுடிஎம்)வில் (யுடிஎம்) மாணவர்களுக்குக்  கற்பிப்பதற்குப் பயன்படுத்தபப்டும்  பாடக் குறிப்புகளில்  இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் குறித்த தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பது,   அறியாமை   நாடெங்கிலும்,  பல்கலைக்கழகங்களிலும்  பரவிக்  கிடப்பதைக்  காண்பிக்கிறது என மஇகா  தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.

இந்துக்களுக்கு  இஸ்லாம்தான்  நன்னடத்தையையும்  சுத்தத்தையும்  கற்றுக்கொடுத்ததாகக்  கூறும்  Tamadun Islam,  Tamadun Asia (Titas) பாடக்  குறிப்புகள்  திருத்தி  அமைக்கப்படும்  என  யுடிஎம்  நேற்றுத்  தெரிவித்திருந்தது.

“அறிவின்  பீடமாக  இருக்க  வேண்டிய  இடத்தில்  அறியாமை தேங்கி  நிற்கிறது..

“முன்பு இது பள்ளிகளில் காணப்பட்டது.. இப்போது  பல்கலைக்கழகங்களிலும் இருக்கிறது” என்று டாக்டர் சுப்ரமணியம் இன்று  ஓர்  அறிக்கையில் கூறினார்.

“அறிவார்ந்த  நேர்மை  என்ற நிலையைக்  காண்பது  எப்போது?”, என்றவர்  வினவினார்.