அவர்கள் தெருக்களில் அலைந்து திரிந்து பிச்சை எடுப்பவர்களாக இருக்கலாம் ஆனாலும் பிச்சை இடுபவர்களைவிட பிச்சை எடுக்கும் இவர்களிடம்தான் இருப்பு அதிகம் என்கிறார் பினாங்கு சமூக நல இயக்குனர் சைட் சிடுப்.
பிச்சைக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது சிக்கியவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்களில் சிலருக்கு ஒரு நாளில் ஆயிரம் ரிங்கிட்வரை கிடைக்கும் தகவல் தெரிய வந்தது.
“மலேசியர்களின் தாராள குணம் பிச்சைக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது”, என்று சைட் சிடுப் கூறினார்.