கோலா கங்சார் இடைத் தேர்தல்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமைத்துவத்தின்மீதும் கோலா கங்சார் இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்தும் அதிருப்தி அடைந்துள்ள அம்னோ கட்சியினர் பலர் அமனாவுக்கு ஆதரவு அளிக்கிறார்களாம். பேரா அமனா தலைவர் அஸ்முனி அவி இவ்வாறு கூறிகொள்கிறார்.
அவர்கள் இந்த ஆதரவை வாக்குகளாக மாற்றிக் காட்டப்போவதாக உறுதி அளித்திருக்கிறார்கள் என அஸ்முனி இன்று கோலா கங்சாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
நாளை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இரண்டாவது தடவையாக கோலா கங்சார் வருவார் என்பதுடன் குடிமக்கள் பிரகடன இயக்கம், அம்னோ கிளர்ச்சித் தரப்பான காபோங்கான் கெத்துவா சாவாங்கான் மலேசியா (ஜிகேசிஎம்) ஆகியவையும் வருகை புரிய விருப்பதாகத் தெரிவித்த அஸ்முனி, இவை மக்கள் மட்டுமல்ல அம்னோ ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர்கூட நஜிப்பையும் பிஎன்னையும் நிராகரிப்பதைக் காட்டுகின்றன என்றார்.
பாவம் அஸ்முனி! நிலா கட்சியில் உழைத்து ஓடாகிப் போன பிறகு வீசி எறியப்பட்டார். இப்பொழுது அமானாவில் உள்ளார். அவருக்கு ஆதரவான நிலா கட்சி உறுப்பினர் நிறையவே கோலாகங்சாரில் உள்ளதாக ஒரு பட்சி சொல்லிட்டுப் போகுது. ம.இ.க. தொகுதி தலைவர் தொலைப்பேசி வழி வெளி வட்டாரத்தில் இருக்கும் இந்திய ஓட்டாளர்களுக்குப் பணம் கொடுத்து ஒட்டுப் போடச் சொல்லி அழைக்கின்றாராம். தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல் தம் பேரப்பிள்ளைகளிடம் விளையாட கோலாலம்பூர் சென்று விடுவார். அதற்கப்புறம் அத்தொகுதி இந்தியர் அம்போ! அடுத்த தேர்தல் வரும் வரை. மானங்கெட்ட ம.இ.க. தலைவர்.