ரபிடா: புரோட்டோனில் தலையீடா? நஜிப்பும்தான் அப்போது அமைச்சரவையில் இருந்தார்

rafidபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,    மகாதிர்  முகம்மட்  பிரதமராக  இருந்தபோது  அவரது  அமைச்சரவையில்  தாமும்   ஒர்  அமைச்சராக இருந்ததை   மறந்து  விடக்கூடாது  என்பதை  முன்னாள்  அமைச்சர்  ரபிடா   அசீஸ்  நினைவுறுத்தினார். மகாதிர்  காலத்தில்  புரோட்டோனில்  நிறைய  அரசியல்  தலையீடு  இருந்தது  என்று  நஜிப்  கூறியதற்கு  எதிர்வினையாக  ரபிடா  அவ்வாறு  குறிப்பிட்டார்.

“அது  அரசியல்  தலையீடு  அல்ல. புரோட்டோன்  தேசிய  கார்  என்பதால்  அதன்  தொடர்பில்  அரசாங்கம்  முடிவுகள்  செய்வது  வழக்கமாக  இருந்தது.  இப்போது  நஜிப்  தலைமையிலான  அரசாங்கம்கூட  புரோட்டோனுக்கு  எளிய  நிபந்தனைகளில்  கடன்  கொடுத்துள்ளது.

“நான்  அமைச்சரவையில்  இருந்தபோது  நஜிப்பும்  இருந்தார்  என்பதை  மறந்து  விட  வேண்டாம்”, என  ரபிடா  கூறினார்.

நேற்று நஜிப்   உரையாற்றியபோது  புரோட்டோனில் மகாதிரின்  “காலத்திய  அரசியல்  தலையீடு”  இப்போது  இல்லை  என்று  கூறி  இருந்தார்