1எம்டிபி-இலிருந்து காணாமல் போன யுஎஸ்3.47 பில்லியனைக் கண்டுபிடிப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அரசாங்கமும் ஆர்வம் காட்டுவதுபோல் தெரியவில்லையே அது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் முன்னாள் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா.
1எம்டிபி தலைவர் அருள் கண்ட கந்தசாமி, அந்த நிறுவனம் யுஎஸ்3.47 பில்லியனை ஐபிஐசி-இன் துணை நிறுவனமான Aabar Investments PJS-சுக்கு மாற்றி விடுவதற்குப் பதில் அதே மாதிரி பெயரைக் கொண்டிருந்த abar Investments PJS Limited (BVI)-க்கு மாற்றி விட்டதில் மோசடி நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியிருப்பதை ஹுசாம் சுட்டிக் காட்டினார்.
“அவ்வளவு பெரிய தொகை மாற்றிவிடப்பட்டதில் தவறு நிகழ்ந்திருக்குமானால் அவர் என்ன செய்தார்?
“போலீசில் புகார் செய்தாரா? பிரதமரிடம் தெரிவித்தாரா? பிரதமர் அதைக் கேட்டு என்ன செய்தார்? போலீசை விசாரிக்கச் சொன்னாரா?
“பிரதமராகவுமுள்ள நிதி அமைச்சர், பணத்தை மீட்டெடுக்க என்ன செய்தார்? அவர் எதுவும் செய்யாதது ஏன்? ஆரம்பத்திலிருந்தே இது திட்டமிடப்பட்ட ஒரு வேலையா?”, என ஹுசாம் ஓர் அறிக்கையில் வினவியிருந்தார்.
ஹா ஹா ஹா – அவனுக்கு அதைப்பற்றி என்ன கவலை?
திருடனிடம் போய் திருட்டை விசாரிக்க சொல்வது போல இருக்கு பேச்சு
நாங்கள் காலி செய்தால் நீங்கள் ஆர்வம் காட்டுகிறீர்கள்! நீங்கள் காலி செய்தால் நாங்கள் ஆர்வம் காட்டுகிறோம்! அரசியலில் இது சகஜமப்பா!