விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று நாடு திரும்பும் வேளையில் ஒரு குடும்பத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை

இந்தோனேசியாவில்  தடுத்து  வைக்கப்பட்டிருந்த  மலேசிய  மீனவர்கள்  இன்று விடுவிக்கப்படுவதாக  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அறிவித்தபோது அதில்  ஒருவர் பெயர்  விடுபட்டிருந்தது  அந்த  மீனவரின்  குடும்பத்துக்கு  ஏமாற்றமாக  அமைந்தது.

“இந்தோனேசியா இரண்டு  மீனவர்களை  விடுவிப்பதாக  துணைப்  பிரதமர்  அறிவித்தபோது  நாங்கள்  உணவருந்திக்  கொண்டிருந்தோம்.

“சியா  கீ  சான்னின்  பெயர்  அதில்  இல்லாதது  எங்களுக்கு  வருத்தமளித்தது”,  என அந்த  மீனவரின்  சகோதரர்  சியா  கியா  யாங்  கூறினார்,

தம்  இளவல்  பிப்ரவரியிலிருந்து   சுமத்ராவின்   பெலாவானில்  இந்தோனேசிய  அதிகாரிகளால்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாகவும்    விடுவிக்கப்பட்ட  இருவரும்  பத்தாமில்  தடுத்து  வைக்கப்பட்டவர்கள்  என்றும்  அவர்  சொன்னார்.

அவரின்  80-வயது  தாயாரும்  தம்  மகன்  விரைவில்  திரும்பி  வருவதை  எதிர்பார்க்கிறார்.

இதனிடையே ஜாஹிட்  அறிவித்த  விடுவிக்கப்பட்ட   இரு  மீனவர்களும்  இன்று  மாலை  செகிஞ்சான்  திரும்புவார்கள்.