ஐஜிபி, இஸ்மாயில் சப்ரிமீதான நூருல் இஸ்ஸாவின் வழக்கு முழு விசாரணைக்கு வருகிறது

nurul izzபோலீஸ்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  காலிட்  அபு  பக்காரும்  கிராம, வட்டார   மேம்பாட்டு  அமைச்சர்  சப்ரி  யாக்கூம்  தங்கள்மீது  பிகேஆர்  உதவித்  தலைவர்  கொண்டுவந்த   அவதூறு  வழக்கை  இரத்துச்  செய்ய  வேண்டும்  செய்து  கொண்டிருந்த  மனுவைக்  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது.

அவர்களின்  மனுவைத்  தள்ளுபடி  செய்த  நீதிபதி  ஜோன்  லூயிஸ்  ஓ’ஹாரா  வழக்கு  முழு  விசாரணைக்கு  அனுப்பப்படுவதே  முறையாகும்  என்று  கூறி  மே 8,  2017-இல்  அது  விசாரணைக்கு  வரும்  என்றார்.

இரு தரப்பும்  மத்தியஸ்தம் வழியாக  விவகாரத்துக்குத்  தீர்வு  காண்பது   பற்றியும்  ஆலோசிக்கலாம்  எனவும்  நீதிபதி  அறிவுறுத்தினார்.

அவர்களுக்கு எதிராக  கடந்த  ஆண்டு  நவம்பர்  26-இல்  வழக்கைப்  பதிவு  செய்த  நூருல்  இஸ்ஸா,  அதே  நாளில்  புக்கிட்  அமான்  போலீஸ்   தலைமையகத்தில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  காலிட்  தம்மை  அவமதிக்கும்  வகையில்  பேசினார்  என்று  கூறியிருந்தார்.

அதே  நாளில்,   இஸ்மாயில்  சப்ரியும்  தம்மைப்  பழித்துரைக்கும்  வகையில்  பகாங்,  பெராவில்,  ஒரு  நிகழ்வில்  பேசினார் என்றாரவர்.