விரிவுரையாளர்கள் பாடக் குறிப்பிகள் தயாரிக்கும்போது மற்றவர்களின் சமய, கலாச்சார உணர்வுகளை மதிப்பளிக்க வேண்டும் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் என்ற முறையில் விரிவுரையாளர்கள் மற்ற இனத்தாரின் சமயங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி 1மலேசிய உணர்வுகளை வளர்க்க வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ வலியுறுத்தினார்.
யுனிவர்சிடி டெக்னோலோஜி மலேசியாவில் ஒரு விரிவுரையாளர் இந்துக்களையும் சீக்கியர்களையும் இழிவுபடுத்தும் பாடக் குறிப்புகளைப் பயன்படுத்தியது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் அப்படிப்பட்ட விவகாரங்கள் எழக்கூடாது என்பதற்கு நல்ல முன்மாதிரி என்றார்.
அத்தோடு விரிவுரையாளர்கள் மற்ற சமயங்களைப் பற்றி ஏழுதும்போது அந்த அந்த சமயநூல்களைக் கற்று தெளிவுபெற்றிருக்க வேண்டும். எந்த அழுக்குகளும் அங்கிருந்தால் சம்பந்தபட்ட சமய அறிஞர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். பின்னரே அச்சிக்குச் செல்ல வேண்டும்!
விரிவுரையாளர்களே மடையர்களாக இருந்தால் என்ன செய்வது?
அரைவேக்காடு 3ம் தர பட்டம் பெற்ற விரிவுரையாளர்கள். இதிலிருந்து தெரியவில்லையா? சில பல்கலைகழகங்கள் வெளிநாட்டில் மலேசிய அரசு அனுப்பிய மாணவர்களினால் பலன் அடைந்து தங்களின் நன்றியை அரைவேக்காடுகளுக்கு பட்டங்களினால் தெரிவித்துக்கொள்கின்றன -வேறு ஒன்றும் இல்லை. முன்பு அமெரிக்க பட்டங்களை அங்கீகரிக்க மாட்டார்கள் -இப்போது பெரும்பாலான ‘விரிவுரையாளர்களின்’ பட்டங்கள் அங்கு கொடுக்கப்பட்டவைதான். எத்தனை பேர் அங்குள்ள hardaward போன்ற பல்கலைகழகங்களில் பயின்றவர்கள்? இதே நிலை தான் எல்லா துறைகளிலும்– எல்லாம் காகாதிமிரின் கைங்கரியம்.
விரிவுரையாளர்கள் பாட குறிப்புகள் தயாரிக்கும்போது (குறிப்பாக இன விவகாரங்களில்) மற்ற இனத்தவரின் பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து செய்தால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என்பதை அறியாத எருமைகள் எல்லாம் “கல்வி அமைச்சர்”.