சுங்கை புசார் மற்றும் கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றுள்ளது.
இறுதி நிலவரம்:
சுங்கை புசார்
பிஎன் – 16,800
அமனா – 7,609
பாஸ் – 6,902
பெரும்பான்மை: 9,191
கோலகங்சார்
பிஎன் – 12, 653
அமனா – 4,883
பாஸ் – 5,684
சுயேட்சை- 54
இரவு மணி 9.10 நிலவரப்படி:
சுங்கை புசார்: பிஎன் – 16790
பாஸ் – 6934
அமனா – 7609
கோலகங்சார் பிஎன் – 12584
பாஸ் – 5660
அமனா – 4850
சுயேட்சை – 54
எதிர்ப் பார்த்தது தான். இடைதேர்தல் என்றால் அரசு பணத்தால் மக்களை விலை பேசிவிடுவார்கள்.அதுதான் நடந்ததும். இருந்தாலும் பாஸ் கட்சிக்கு இது பாடமாக அமைந்திருக்கும்.
பணநாயக வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
மலேசியர்கள் சிந்தித்து ஒட்டு போடும் குணம் அற்றவர்கள் என்பதையே இந்த முடிவு காட்டுகிறது. மேலும் இவர்களும் தமிழ் நாட்டு மக்களை போன்றே இலவசத்துக்கு வசப் பட்ட மாக்கள்.
இதுதான் பணநாயகம். அரசியல் மனவளர்ச்சி வளர இன்னும் பல ஆண்டுகள் -தேவை. அப்போதும் சந்தேகமே– பணம் பத்தும் பண்ணும் எக்காலத்திலும்– பிறகு விடிவு?
DAP யின் குளறுபடியால் மலாய்காரர்களின் பிளவு ….தேசிய முன்னணிக்கு வெற்றியை தேடி தந்தது….
எதிர்க் கட்சிகளுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. அவை கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன..அடுத்த பொதுத் தேர்தலில் மத்தியில் (புத்ரா ஜெயா) அரசாங்கத்தைப் பிடிப்பதை விட இருக்கும் மாநிலங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டியதே பெரிய சவாலாக இருக்கப் போகிறது..அதற்கு இப்போதிருந்தே அரசியல் (எதிர்க்) கட்சிகள் தங்களுக்கிடையிலான காழ்ப்புணர்வுகளையும் அடுத்தவரை கவிழ்க்கும் நோக்கத்தையும் களைய வேண்டும்..இல்லாவிட்டால் உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணன் கதை தான்.
பாஸ் கட்சிக்கு நெற்றியடி.அம்னொவிடம் தஞ்சம் அடைந்ததன் விளைவு,கிடைத்த பரிசு. அடுத்த போதுதேர்தளுக்க்குள் பாஸ் தன் நிலையை மாற்றாவிடில் லாபம் அம்னொக்குதான். பணத்தால் மக்கள் திசை மாறும் என்பது இந்த இடைதேர்தல் ஓர் எடுத்துகாட்டு. இதற்கு மேலும் பாஸ் அம்னொவுடன் கைகோர்த்து செயல்படுமானால் அடுத்த தேர்தலோடு பாஸ் இல்லாமல் போக நேரிடும்.
பயங்கர பண பேரம் வோட்டு போடும் நபர்களின் இடம் மாற்றம் கள்ள வோட்டு BN NOT கேன்ட்லேமன் தே got NO balls போர் கேன்ட்லேமன் fight