நஜிப்: கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவ விரும்புகிறது

 

najibhseforkelantan2014 ஆண்டில் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசாங்கம் அதன் கொள்கையில் மாற்றங்கள் செய்வதற்கு தயாராக இருப்பதாக நஜிப் கூறினார்.

கிளந்தானை எதிர்கட்சி ஆட்சி செய்த போதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரிம65,000 மதிப்புள்ள வீடுகளை கட்டி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பததாக பிரதமர் கூறினார்.

மத்திய அரசாங்கம் 1,804 வீடுகளை கட்டிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுகொண்டு இருக்கிறது. அவற்றில் 844 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 243 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றாரவர்.

இன்றைய நிகழ்ச்சியின் போது, 31 குடும்பங்கள் அவர்களுடைய வீடுகளுக்கான சாவிகளை பெற்றுக் கொண்டனர்.