வீழ்ச்சியடைந்துள்ள எதிரணி மீண்டும் எழுச்சி பெறும், டிஎபி கூறுகிறது

 

liewdapநேற்று நடந்துமுடிந்த இரண்டு இடைத் தேர்தகள் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற சரவாக் மாநில தேர்தல் ஆகியவற்றில் எதிரணி பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும் பாக்கத்தான் ஹரப்பான் மீண்டும் எழுச்சி பெறும் என்று டிஎபியின் கல்வி பிரிவு தலைவர் லியு சின் தோங் கூறினார்.

இன்றைய சூழ்நிலை 1995 பொதுத் தேர்தல், 2007 இல் நடைபெற்ற மாசாப் மற்றும் இஜோக் இடைத் தேர்தல்களின் போது காணப்பட்ட சூழ்நிலையை போல் இருக்கின்றது என்றாரவர்.

1995 இல் பொதுத் தேர்தலில் எதிரணி அழிக்கப்பட்டது. பழைய நிலைக்குத் திரும்புவதற்கு பல ஆண்டுகள் ஆயிற்று..

ஏப்ரல் 2007 இல் மாசாப் மற்றும் இஜோக் இடைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மார்ச் 8, 2008 இல் ஓர் அரசியல் சுனாமி ஏற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதை லியு சுட்டிக் காட்டினர்.

இதைப் போன்ற சிரமமான சூழ்நிலையில், நாம் தளர்ந்து போகக்கூடாது. மாறாக, ஒரு புதிய மற்றும் சிறந்த மலேசியாவுக்கான தலைமைத்துவத்தை உருவாக்க நாம் எழுச்சி பெற வேண்டும் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகிறார்.