பிஎன்னுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த இடைத் தேர்தல்கள் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நல்ல பாடமாக அமையட்டும் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட்.
முன்னாள் பிரதமர், அவர்மீதுள்ள நம்பிக்கையையும் வாழ்நாள் சாதனைகளையும் எதிரணியுடன் ஒத்துழைப்பதன் மூலம் கெடுத்துக்கொள்ளக் கூடாது என ஹமிட் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
“அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. மக்கள் அவரை மதிக்க வேண்டும். அதைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது”, என்றாரவர்.
எ
அன்று அரசியலால் முன்னாள் தலைமை நீதிபதி. இன்று அரசியலால் வியாபாரி.
அவ்வளவு சீக்கிரத்தில் மகாதிமிரின் முயற்சிகளை எடைப் போட்டுவிடவேண்டாம். தே.முவுக்கோ, அல்லது அல்தாந்துயா நஜிப்பிற்கோ இது ஒன்றும் பெரிய வெற்றியல்ல. சென்ற தேர்தலில் எதிர்தரப்புக்கு வாக்களித்த 400 பேரை அருகிலுள்ள பாடாங் ரெண்காஸ் தொகுதிக்கு மாற்றிவிட்டது SPR . வெளியூரில் வேலை செய்யும் ஏறத்தாழ 3000 பேர் வாக்களிக்க வரவில்லை. இது கோலக் கங்சாரின் நிலை. எந்த அளவிற்கு BN ‘இலவச அரிசி’ வாக்காளர்களின் வீட்டினுள் அடைக்கலம் புகுந்தது என நேரிலேயே கண்டேன்.
டெமோகிரசி நாடு அனால் நடப்பது ???
நீங்கள் என்ன நீதி நிலை நாட்டி இருக்கிறீர் ? மூடிகிட்டு போகலாம் !
BN அரசாங்கத்திற்கு குறிப்பாக நஜிபுக்கு எதிராக 46% ஓட்டுக்கள் எதிர் கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறது. BN அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகத்திற்க்கும்/ஊழலுக்கும் ஆதரவாக 8% ஓட்டுக்கள்தான் அதிகமாக கிடைத்திருக்கிறது.
இதுவே இருமுனை போட்டி என்றிருந்தால், BN அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகத்திற்க்கும்/ஊழலுக்கும் ஆதரவு 8 சதவீதத்திற்கும் குறைவாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
ஆகையால், 46% மக்கள் BN அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து இருப்பதை, “இடைத் தேர்தல்கள் நஜிப்புக்கு நல்லதொரு பாடம்” என்றும் கூறலாமே.
“அவர்(மகாதீர்) ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது”, நல்ல விண்ணம்தான் இருப்பினும் அதற்கு முன் தாங்களும் தாங்கள் சார்ந்த நீதித்துறையும் அரசாங்கத்தின் கைப்பாவையாக இல்லாது, நடுநிலைமை வகிக்க வேண்டியது மிக முக்கியம், ஒரு சாரருக்காக பேசுவது நிதீத்துறைக்கு அழகல்ல! இதைகூட அறியாமல் கமெண்டு பண்ணுகிறேன் என்று காமெடி பண்ணுகிறாரே முன்னாள் தலைமை நீதிபதி 🙂