சாபாவுக்கு அப்பால் உள்ள கடலில் நான்கு மலேசியர்கள் கடத்தப்பட்டதாகக் கூறும் செய்திகளை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்தார்.
“அது வெறும் வதந்தி. நம் மக்களில் யாரும் கடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல் இல்லை”, என இன்று புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
“இன்றுவரை பிலிப்பீன்ஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.
“ஆக, அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் அது வெறும் வதந்தி என்றே நினைக்கிறேன்”, என்றாரவர்.
ஜூன் 16-இல் மேலும் நால்வர் கடத்தப்பட்டப்பட்டதாக வந்த செய்தி குறித்து காலிட் அவ்வாறு கருத்துரைத்தார்.
சாபாவில் யாரும் கடத்தப்படவில்லை என்று IGP-யான நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் உள்துறை அமைச்சர் சாபாவில் யாரும் கடத்தப்படவில்லை, பிலிப்பின்ஸ் இஸ்லாமிய கும்பலுக்கு “நன்கொடை” கொடுக்கும்வரை தங்கள் விருந்தாளியாக அழைத்து சென்றுள்ளார்கள் என்பார் (“பிணைப்பணம்” விவகாரம்போல்).
எல்லாம் நாடகம்
இவர் நம் காலத்தில் வாழும் IGP , என்ன தவம் செய்தேமோ ?