பிணைப் பணத்தில் ரிம8.8 மில்லியன்தான் அபு சயாப்புக்குச் சென்றதா?

sayafஅபு  சயாப்   தீவிரவாதிகளால்  கடத்தப்பட்ட   நான்கு  சரவாக்கியர்களின்  விடுதலைக்காக  பி130மில்லியன் (ரிம12 மில்லியன்)  பிணைப்பணம்  கொடுக்கப்பட்டது  ஆனால்,   அதில்  பி100 மில்லியன்(ரிம8.8 மில்லியன்)  மட்டுமே  கடத்தல்காரர்களின்  கைக்குச்  சென்றுள்ளதாகக்  கூறப்படுகிறது  என  மணிலா  டைம்ஸ்  நேற்றிரவு   அறிவித்திருந்தது.

மீதமுள்ள  ரிம3.2 மில்லியனைப்  பயங்கரவாதிகளுடன்  சேர்ந்து  செயல்படும்   மலேசிய,  பிலிப்பீன்ஸ்  அரசு  அதிகாரிகள்  தங்களுக்குள்  பகிர்ந்து  கொண்டிருக்கலாம்  எனப்  பெயர்  குறிப்பிட  விரும்பாத   வட்டாரங்கள்  தெரிவித்ததாக  அந்த  நாளேடு  கூறியது.

“மலேசியாவில்  இவ்விவகாரம்  பற்றிக்கொண்டு  எரிகிறது.  பிணைப்  பணம்  கொடுக்கப்பட்டது  நாளேடுகளில்   தலைப்புச்  செய்திகளாக  இடம்பெற்றுள்ளது.  ஆனால்,  பிலிப்பீன்சில்  அது   ஊடகங்களின்  கவனத்தைப்  பெறாமலிருப்பது  வியப்பாக  உள்ளது.

“கொடுக்கப்பட்ட  பிணைப்  பணம்  ரிம12மில்லியன்  என்பதையும்  அதில்  ரிம8.8மில்லியன்தான்    தங்கள்  கைக்கு  வந்து  சேர்ந்தது  என்பதையும்  அறிந்த  அபு  சாயாப்  கும்பல்  குமுறிக்  கொண்டிருக்கிறது  என்று  தகவல்  கிடைத்திருக்கிறது.

“அப்படி  என்றால்  காணாமல்போன  பணம்  எங்கே?”, என்று  மணிலா  டைம்ஸ்  வினவியது.