ஜனநாயகத்துக்காக போராடும் தியோ பெங் ஹொக் அறக்கட்டளை(டிபிஎச்), சுங்கத்துறை உதவி இயக்குனர் அஹமட் சர்பைனி முகம்மட்டின் மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது வழக்கு தொடுக்கப்படுவதைக் காண விரும்புகிறது.
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் கவனக்குறைவே அஹமட் சர்பைனியின் மரணத்துக்கு வழிகோலியதாகக் கூறி ரிம213,000 இழப்பீடு கொடுக்க உத்தரவிட்ட முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை டிபிஎச் தலைவர் ஏ.சமட் சைட் பாராட்டினார்.
“பொறுப்பற்ற அந்த அரசாங்க நிறுவனமும் அதன் அதிகாரிகளும் அதில் நிகழ்ந்துள்ள இரண்டு மரணங்களுக்கும், 2009-இல் தியோ, 2011-இல் சர்பைனி, பொறுப்பேற்க வேண்டும்.
“ஆனால், எம்ஏசிசி உயர் அதிகாரிகள் எவரும் அந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்று பதவி விலகவுமில்லை, மன்னிப்பு கேட்கவுமில்லை என்பதை டிபிஎச் வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
“ஊழல்தடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டதிலிருந்து அதில் திரும்பத் திரும்ப நிகழும் மனித உரிமை மீறல்கள் அதன் தோற்றத்தைக் களங்கப்படுத்தி விட்டன”, என சமட் கூறினார்,