பிலிப்பீன்சின் தீவிரவாத கும்பலான அபு சயாப்பிடம் சிக்கிக் கொண்டிருந்த நால்வரை விடுவிப்பதற்கு ரிம12 மில்லியன் பிணைப் பணத்தை போலீசிடம்தான் கொடுத்ததாக பிணையாளிகளின் உறவினர்கள் உறுதியாகக் கூறினர்.
போலீஸ் பிணைப் பணத்தைப் பெறவில்லை என போலீஸ் ப்டைத் தலைவர் காலிட் அபு பக்கார் மறுத்ததை அடுத்து அவர்கள் அதை வலியுறுத்தினர்.
“ரிம12மில்லியன் வங்கி மூலமாக சண்டாகான் அனுப்பப்பட்டதாக நான் ஏற்கனவே கூறியதையே இப்போதும் வலியுறுத்துகிறேன்.
“யாருக்கேனும் சந்தேகமிருந்தால் அவர்கள் ஹொங் லியோங் பேங்கில் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்”, எனப் பிணையாளீகள் குடும்பதாரின் பேச்சாளர் லாவ் செங் கியோங் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்வதை அக்குடும்பத்தார் விரும்பவில்லை என்பதால் அது பற்றி அவர் மேலும் கருத்துரைக்கவில்லை.
நால்வரை விடுவிப்பதற்கு கொடுத்தது “பிணைப்பணதான்” என்று கூறி, “கடத்தலுக்குப் பிணைப்பணம் ஆதரிப்பதில்லை” என்று வீராப்புடன் பேசிய உள்துறை அமைச்சரின் முகத்தில் கரியை பூசி விட்டீர்களே.
+++ திருத்தம் +++
நால்வரை விடுவிப்பதற்கு கொடுத்தது “பிணைப்பணதான்” என்று கூறி,
“கடத்தலுக்குப் பிணைப்பணம் கொடுப்பதை அரசாங்கம் ஆதரிப்பதில்லை” என்று வீராப்புடன் பேசிய உள்துறை அமைச்சரின் முகத்தில் கரியை பூசி விட்டீர்களே.
பெருநாள் காலத்தில் கொடுத்தது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். என்ன செய்வது இப்படித்தான் முகத்தில் கரியை பூசிக்கொள்ள வேண்டியதுதான்.
வருங்காலத்தில் இது வியாபாரமாக கூட மாறலாம்.
போலீசாரை கையில் போட்டுக்கொண்டு, ‘காயை’ நகர்த்தினால், கடத்தலும் நல்ல வியாபாரமே.
“பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்று சொல்வதுண்டு போகிற போக்கைப் பார்த்தால் பணம் என்று வந்துவிட்டால் குணம் மட்டுமல்ல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் குப்பையில்தான் போலும்..!