மூத்த செய்தியாளர் ஒருவர்.பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமக்கு அடுத்த இடத்தில் உள்ள அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைத் தீர்த்துக்கட்ட திட்டமிடக் கூடும் என்று ஆருடம் கூறியுள்ளார்.
துணைப் பிரதமரான ஜாஹிட் ஹமிடி சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல்களில் பிஎன் நடவடிக்கை இயக்குனராக இருந்து செயல்பட்டு தேர்தலில் பிஎன்னை வெற்றிபெற வைத்ததில் தன் ‘போஸ்’ நஜிப்பையும் மிஞ்சி விட்டார் என ஏ.காடிர் ஜாசின் கூறினார்.
“நஜிப்பின் பெயரையும் உருவப்படங்களையும் கொண்ட பதாதைகளையும் இணையப் பதிவுகளையும்விட ஜாஹிட்டின் பெயரும் உருவப்படங்களும் பொறிக்கப்பட்டவைதாம் இரண்டு இடங்களிலும் அதிகம் காணப்பட்டன.
“இப்போது இடைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றாகி விட்டது. நஜிப் இனி அமைச்சரவையைத் திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபடலாம்”, என காடிர் தம் வலைபதிவில் கூறினார்.
“கடந்த ஜூலையில் முகைதின் துணைப் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், ஜாஹிட் அம்னோவில் வலுவான தலைவராகவும் மிகவும் போற்றப்படும் தலைவராகவும் வருங்காலத்தில் நஜிப்பை எதிர்த்து நின்று வெல்லக்கூடிய ஆற்றல் உள்ளவராகவும் விளங்குகிறார்.
“சிலர் நஜிப்பை விடவும் இவருக்குத்தான் செல்வாக்கு அதிகம் என்றுகூட சொல்கிறார்கள். இவற்றையெல்லாம், நஜிப்பின் உள்வட்டங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்களுக்கு ஜாஹிட்டை அவ்வளவாக பிடிக்காது. அவர் தங்களுக்குச் சரிப்பட்டு வர மாட்டார் என்று நினைக்கிறார்கள்”, என்றார் காடிர்.
அவர்கள் விரும்புவது நஜிப்பின் உறவினரான தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனை. ஹிஷாம் பலவீனமானவர் என்பது அவர்களின் கணிப்பு. அதனால் அவரை விருப்படி ஆட்டி வைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அதன் விளவாக அவர்கள் இப்போது ஜாஹிட்டுக்கு எதிராக வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். அவரைப் பற்றித் தப்பும் தவறுமாக செய்திகளைப் பரப்பி விடுகிறார்கள். அவருக்கு ஆங்கிலம் பேச வராது என்கிறார்கள், அன்வார் இப்ராகிமுடன் முன்பு நெருக்கமாக இருந்தவர் என்கிறார்கள், அண்மையில் அவர் மகாதிரைச் ‘இரகசியமாக’ சந்தித்தார் என்கிறார்கள்.
ஜாஹிட் உண்மையிலேயே நஜிப் விசுவாசியாக இருக்கலாம். ஆனால், பிரச்னை என்று வருமானால் உதவியாளரை நம்புவதைவிட உறவினரை நம்புவதே மேல் என்ற எண்ணம்தானே வரும்.
“அதை வைத்துப் பார்த்தால் வரப்போகும் அமைச்சரவை மாற்றத்தில் ஹிஷாமுடின் ‘பதவி உயர்வு’ கொடுக்கப்பட்டு ஜாஹிட் ‘பதவி இறக்கப்படுவார்’ என்று பேசப்படுவதில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது”, என்றாரவர்.
நாடு, சுடுகாடாகிவிட்டது. பிணங்களை [மக்களை] புதைக்கலாமா, எரிக்கலாமா என்பதில் போட்டா போட்டி.
மகாதீர் காலத்திலேயே, மூசா ஹீத்தாம், கபார் பாபா, அன்வார் என துணைப்பிரதமர்கள் பந்தாடப்படுவதைப் பார்த்து வந்தவர்தானே நம்பிக்கை நாயகன் ! குருநாதர் எவ்வழியோ அவரின் பிரதம சீடரும் அவ்வழியே நடப்பார் என்று நாமும் நம்புவோம்.
இனி புதிய ஆட்டம் ஆரம்பம் . நம்பிக்கை “NAYAGUN” வைப்பார் ஆப்பு இந்த இந்தோனேசியக்காரனுக்கு .
குறி இல்ல! ஏற்பாடு….