பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகன் முகம்மட் நஸிபுடின் முகம்மட் நஜிப் ஒரு நிறுவனம் வாங்கிய கடனுக்கு உத்தரவாதமளித்திருந்தார். அந்த நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் கடனுக்கு உத்தரவாதமளித்திருந்த நஸிபிடின்மீது சிஐஎம்பி வழக்கு தொடுத்துள்ளது.
வழக்கு ஆகஸ்ட் முதல் நாள் விசாரணைக்கு வரும் என உயர் நீதிமன்ற நீதிபதி அஹ்மட் சைடி இப்ராகிம் கூறினார். அப்போது அந்த நிறுவனம் கடன் வாங்கிய ரிம200,000-ஐ நஸிபிடின் செலுத்த வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.


























USD 2.6 பில்லியன் தந்தைக்கு “நன்கொடை” கொடுக்க வெளிநாட்டில் நன்கொடையாளர் இருக்கும்போது, MYR 200,000/= மகனுக்கு “நன்கொடை” கொடுக்க உள்நாட்டில் நன்கொடையாளர் இல்லாததுபோல் அல்லவா செய்தியை பெரிதாக்கி விட்டீர்கள்.
இது வெல்லாம் ஒரு சேதி என்று வெளியிடுகிறீர்கள் !!
நாங்களும் இதை வேலை வெட்டி இல்லை என்று படித்து கொண்டிருக்கிறோம் !!
இதெல்லாம் ஒரு தொகையா! சும்மா பாக்கெட் மணி!
“துணை போனாலும் பிணை போகாதே” என்று நம்பிக்கை நாயகன் தம் இளவலுக்கு சொல்லித்தரவில்லை போலும்.