டிஏபி டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ இன்னின் கார்மீது சாயம் வீசியடிக்கப்பட்டிருந்தது. சுங்கை புசார் இடைத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டு திரும்பிய அன்று அது நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
இப்படி நடப்பது இரண்டாவது முறை என்று குறிப்பிட்ட அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தமக்குத் தொந்திரவு தந்துவரும் ஒரு நபர்தான் இதைச் செய்திருக்கிறார் என்றார்.
“மூன்றாண்டுகளாக கைபேசிக்கும் அலுவலகத்துக்கும் செய்திகள் அனுப்பி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தொல்லை கொடுத்து வருகிறார்”, என்றாரவர்.
சில நேரங்களில் அவர்களின் கார்களில் சிறு குறிப்புகள் வைக்கிறார், பசியாற உணவு வைக்கிறார், இன்னும் பலவகை பொருள்களை வைக்கிறார்.ராம்
அண்மைக் காலமாக, இயோவின் காரின்மீது சிவப்புச் சாயத்தைத் தெளிக்கத் தொடங்கியுள்ள அந்நபர் தம்முடன் கைபேசியில் பேச வேண்டும் அல்லது தம்மை நேரில் சந்திக்க வேண்டும் என்று மிரட்டுகிறாராம்.
இயோ போலீசில் புகார் செய்திருக்கிறார். போலீஸ் அவரை விசாரணை செய்து வருகிறது.
அந்நபர் மூன்று, நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய இயோ, விரைவில் அவர் வெளியில் வந்து விடுவார் என்றார்.
இது மட்டும் சிங்கப்பூரில் நடந்திருந்தால் இந்நேரம் அவன் கம்பிக்கு பின் இருப்பான் ஆனால் இங்கு ?