ஆம். பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கெமருன் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து அந்த அமைப்பின் உறுப்பினர் நாடான பிரிட்டன் விலக வேண்டும் என்பதற்கு பிரிட்டீஷ் மக்கள் 51.7/48.3 விழுக்காடு ஆதரவை பொதுவாக்களிப்பின் வழி தெரிவித்துள்ளனர்.
பிரிட்டீஷ் மக்களின் இத்தீர்ப்பை தொடர்ந்து, தமது நாட்டின் அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தை வழிநடத்திச் செல்வதற்கு தாம் கேப்டனாக இருப்பது முறையல்ல என்று கருதுவதாக டேவிட் கெமருன் அவரது டவுனின் ஸ்திரிட் அலுவலகத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் அடுத்த அக்டோபர் மாத வாக்கில் பதவி துறக்கப் போவதாக அறிவித்தார்.
முதலாம் உலகங்களில் கொள்கைக்கும் வாக்குறுதிகளுக்கும் மதிப்பு இருக்கின்றது–நம்பலாம். மூன்றாம் உலகங்களில் அதற்கு என்ன விலை என்று கேட்பார்கள்.
முதலாம் உலகங்களில் கொள்கைக்காக பிரதமர் பதவியைக் கூட துச்சமாக மதிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஆனால், நமது நாட்டில்தான் “கொள்ளைதான் கொள்கை” என பதவியில் நீடிப்பவர்களே “நம்பிக்கை நாயகனாகி” விடுகிறார்கள்.
துளைந்தான் துரோகி ! இந்தியாவை ஆண்ட பிரிட்டனே, இனி உன்னை 27 ஐரோப்பிய நாடுகள் “சுயநல நாடு” என்று துப்பும். நீ ஒழிக நீ ஒழிக…..
ஜனநாயகத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளித்து பதவி துறப்பது அந்நாட்டின் நேர்மையான தலைமைத்துவம். இந்நாட்டில் அதுபோன்று நடப்பதற்கு வாய்ப்பில்லை. மக்களின் துரதிஷ்டம்.
ஐயா dhilip2 அவர்களே- ஏனய்யா உங்களுக்கு இவ்வளவு இப்படிப்பட்ட எண்ணம்? நான் ஆங்கில வெள்ளைக்காரனை -தலைமேல் வைத்து ஆடுபவன் அல்ல. ஆனாலும் ஒன்று மட்டும் சொல்வேன்- வெள்ளைக்காரன் பல நன்மைகள் தான் ஆண்ட நாடுகளில் செய்துள்ளான்– அதை நாம் மறக்க கூடாது. கணித மேதை ராமானுஜனை உயர்த்தியது யார்? ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்ட ராமானுஜனை கணிதம் மட்டும் செய்ய அனுமதி கொடுத்தது யார்? ராமானுஜனை இங்கிலாந்துக்கே அனுப்பியது யார்–ஆங்கிலேயர்கள் காலனித்துவ வாதிகளாக இருந்தாலும் மனிதாபிமானம் உள்ளவர்கள்– அங்குள்ள பல்கலைக்கழகங்கள் சிந்திப்பதற்கும் காலனித்துவ ஒழிப்புக்கு வழிவகுத்தன. உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்ததும் அவர்களே– முற்போக்கு சிந்தனைகளை தூண்டியவர்களும் அவர்களே.அங்கு இனவாதிகள் இருக்கின்றனர் ஆனாலும் பலர் நியாயத்திற்கு துணை நிற்பார்கள். நான் அங்கு வாழ்ந்திருக்கிறேன் -அதனால் அவர்களை தூற்ற வேண்டாம். நல்லதை ஏற்போம்–கெட்டதை விட்டு விடுவோம். இன்னும் பல –எனினும் இதுபோதும் — அங்கு போய் பார்த்தால் தான் தெரியும் இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்கள் எப்படி அங்குள்ள சமூக வழக்கத்தை தவறாக பயன்படுத்தி இருக்கின்றனர் என்று புரியும்.
en thaai தமிழ் அவர்களே, மலேசியாவில், பிரித்தானிய பல்கலைக்கழகம் என்று கூரி, 45000 மாணவர்களை ஏமாத்தி உள்ளது பிரிட்டன் பல்கலைகழகம். உண்மையில் ஒரு தூர நோக்கு கல்வி. ஆனால் பார்கலைக்கழகம் என்று ஏமாத்துகிறது. இதை பாருங்கள்: http://www.graduatesunion.com/Malaysian-law-Geoffrey_v_The-80469.pdf
இதையும் பாருங்கள் :
https://www.timeshighereducation.com/news/tribunal-says-nottingham-ran-franchise/310368.article
நான் டேவிட் கேமரூனுக்கு எதிரியல்ல! அவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கிறேன்! ஆனால் தமிழ்நாட்டுக்கு வெள்ளையன் செய்த அநீதி என்பது மறக்கவோ, மறுக்கவோ முடியாதது! வலுக்கட்டாயமாக தமிழ் நாட்டில் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தி தமிழர்களை அடிமைகளாக்கி அவர்களை மலேயாவுக்கும், இலங்கைக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வெள்ளையர்களின் தோட்டங்களுக்கு அடிமைகளாக அனுப்பியவன். அன்றிலிருந்து தமிழனுக்கு விடிவே இல்லை!
ஐயா abraham terah – உங்களை ஒன்று கேட்கிறேன்- ஏன் சீனாவிலிருந்தும் (ஹாங் காங் ) மற்ற பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளில் இருந்தும் நீங்கள் கூறியது போல் அனுப்ப வில்லை? சிறிது சிந்தியுங்கள். எல்லாம் காலம் செய்த கோலம்– முக்கியமாக நம்மவர்களின் கையால் ஆகா தனத்தினால்தான்– நம்மை சுலபத்தில் அடிமைகள் ஆக்கியதின் விளைவு– நாம் மிகவும் நன்றியுள்ள நாய்கள் என்று வெள்ளையனுக்கு தெரிந்தது அதனால் தான். ஏன் தாய்லாந்து போன்ற நாடுகள் தனித்தே இருந்தன? மலாயாவிலிருந்து மலாய்க்காரர்கள் இலங்கைக்கு அனுப்ப பட்டனர். நம்மிடம் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் பலர் இருந்தனர் இருக்கின்றனர் இருப்பார்கள். நம்மையே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். வெள்ளை தோலுக்கு இன்றும் நம்மிடையே என்ன மதிப்பு! இதிலிருந்தே புரிய வேண்டும்.