கிளர்ச்ச்சிக்கார அம்னோ கிளைத் தலைவர்களைக் கொண்ட கெராக்கான் கெத்துவா சாவாங்கான் மலேசியா (ஜிகேசிஎம்), ஒரு புதிய கட்சி அமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறது.
ஆண்டுத் தொடக்கத்தில் அம்னோவிலிருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைத் தலைவர் முகைதின் யாசின், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர் ஆகியோரைக் கொண்டு அக்கட்சியை நடத்தலாம் என்று அது நினைக்கிறது.
“அந்த நோக்கத்தில் ஜிகேசிஎம் செயல்படும். அம்னோவின்மீது நம்பிக்கை குறைந்து விட்டது. மூடுவிழா காணப் போகிறதா அம்னோ?”, என்று ஜிகேசிஎம் தலைவர் கமருல் அஸ்மான் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.
பிலிப்பீன்சில் மக்கள் கிளர்ந்தெழுந்ததை கமருல் நஜிப்புக்கும் அம்னோ உச்ச மன்றத்துக்கும் நினைவுபடுத்தினார்.
“நாட்டில் பரவலாகக் காணப்படும் அதிகார அத்துமீறலை எதிர்க்க மக்கள் கிளர்ந்து எழுவார்கள்.
“நஜிப்பும் உச்ச மன்றமும், 1986, பிப்ரவரி 22-க்கும் 26-க்குமிடையே பிலிப்பீன்சில் மக்கள் சக்தி புரட்சியில் ஈடுபட்டு பெர்டினாண்ட் மார்கோசைப் அதிகாரத்திலிருந்து வீழ்த்தியதை மறக்கலாகாது”< என்றாரவர்.
மூன்றாவது அணி ஒன்றை உருவாவதை தவிர்த்து, பக்காத்தான் ஹராப்பானில் உள்ள அமணாவில் சேர்த்துக்கொண்டு, அம்னோவை எதிர்ப்பதே விவேகமானதாகும். இல்லையேல் மக்கள் போடும் வாக்குகள் சிதறுண்டு, பக்காத்தான் சின்னாபின்னமாகிவிடும்.
இங்கு எவனையும் நம்ப முடியாது– காலை வாரி விடுவதில் கில்லாடிகள். அதிலும் நம்பிக்கை நாயகனின் பணநாயகம் பாதாளம் வரை பாயும்–நாம் என்றுமே 3 ம் உலகமே. இதற்கும் கல்விக்கும் தொடர்பு இருக்கிறது– சிந்திக்கும் திறனும் நீதி நியாயம் என்று கொள்கை உள்ள வர்களை உருவாக்கி இருந்தால் கொஞ்சம் நீதியை எதிர்பார்க்கலாம்– பிரதமனே கொள்ளை கொலையில் ஊழலில் முதன்மை பெற்றிருக்கும் நிலையில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்–சொல்லி சொல்லி புளித்து விட்டது-சொல்லியும் மாளாது–அதிலும் பெரும்பாலான மக்களின் கண்களுக்கு இதெல்லாம் தெரியாது.