சிறையில் இருக்கும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், எதிரணியினர் சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல் தோல்விக்கு ஒருவர்மீது மற்றொருவர் பழிபோடுவதை முதலில் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
“எதிரணி தேர்தல் முடிவை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு அதன் பலவீனங்களைக் கவனமாகக் கண்டறிய வேண்டும்.
“சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிருக்கவும் பழி போடவும் இது நேரமல்ல”, என்று தம் வழக்குரைஞர்கள் மூலமாக வெளியிட்ட அறிக்கையில் அன்வார் வலியுறுத்தினார்.
அன்வார் சொல்வது உண்மையிலும் உண்மை. எதிரணியில் குழப்பங்களை உருவாக்க அல்தான்துயா நஜிப் பல பேரை அமர்த்தியுள்ளார். உள்ளுக்குள்ளேயே எட்டப்பன்கள் நிறைந்துவிட்டனர் எல்லாமே பணம். இது, அன்வாருக்கு தெரியாமலில்லை.
முதலில் அஸ்மின் அலியை பதவியில் இருந்து இறக்கினால் எல்லாம் சரியாகிவிடும். பாஸ் காரன் நஜிபுடன் சேர்ந்து ஆடுறான் அஸ்மின் அலி பாஸ் காரனுடன் சேர்ந்து ஆடுறான். ஆக அஸ்மின் அலியை மாட்ரினால் சரியாகிவிடும்.
அன்வார் அவர்களே…நீங்கள் சிறையில் இருந்து சீக்கிரம் வெளியே வரவேண்டும். வரும்போது, அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் புதிய அரசியல் சித்தாந்தத்தோடு வரவேண்டும்..