டிஏபி-யை ‘காஃபீர் ஹர்பி’ என்று பிரகடனப்படுத்திய பகாங் முப்திக்கு எதிராக பிகேஆர் இளைஞர் தலைவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இன்று காலை மணி 11.45க்கு அப்புகாரைச் செய்த பிகேஆர் இளைஞர் சமயப் பிரிவின் தலைவர் வான் ஜி உசேன், அது போலீஸ் விசாரணை செய்ய வேண்டிய முக்கிய விவகாரம் என்றார்.
“முக்கியமான விவகாரம் என்பதால்தான் போலீசில் புகார் செய்கிறோம். இரத்தம் சிந்த விடுக்கப்படும் அறைகூவல்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”, என்றாரவர்.
அண்மையில் இஸ்லாமிய பயங்கரவாதத் தரப்பான ஐஎஸ் மிரட்டல் விடுத்திருப்பதும் இப்போது முப்தியின் இந்தப் பிரகடனமும் சேர்ந்து கவலை கொள்ள வைப்பதாக வான் ஜி கூறினார்.
போலீசில் புகார் பண்ணினாலும் ஆகபோவது ஒன்றுமில்லை. இருந்தாலும் பாராட்டுக்கள் ! பார்த்துங்க இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் பட்டியலில் உங்களுடைய பெயரையும் சேர்த்து கொள்ள போகிறார்கள்.
நீதி, நியாயத்துடன் செயல்படும் இஸ்லாமியர்கள், நம்மிடையே நிறைந்த அளவில் இருக்கவே செய்கிறார்கள். அதற்கு இந்த தோழர் வான் ஜி, ஓர் உதாரணம். பாராட்டுக்கள்.
ஒன்றும் ஆகப்போவதில்லை. உள்ளுக்குள் பெரும்பாலான இஸ்லாமியர்கள் IS போன்ற இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இதுதான் உண்மை—