டிஏபி-யை ‘காஃபீர் ஹர்பி’ என்று பகாங் முப்தி அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் பிரகடனம் செய்த விவகாரத்தில் போலீஸ் என்ன செய்யவுள்ளது என்று கோபிந்த் சிங் டியோ கேள்வி எழுப்புகிறார். இக்கேள்விக்கு போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் பதிலளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
“டிஏபி இஸ்லாத்தை எதிர்த்தது இல்லை. நாங்கள் இஸ்லாம்- எதிர்ப்பாளர்கள் அல்லர். எங்களின் ஆதரவாளர்களில், உறுப்பினரில், மக்கள் பிரதிநிதிகளில் முஸ்லிம்களும் உண்டு. நாங்கள் இஸ்லாத்தை மலேசியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கூட்டரசு அரசமைப்பை மதிக்கிறோம்.
“சட்டத்தைப் பாதுகாக்கும் போலீஸ் படைக்குத் தலைமை தாங்கும் ஐஜிபி இவ்விசயத்தில் அடியோடு மெளனம் காப்பதுதான் புரியவில்லை”, என்று கோபிந்த் கூறினார்.
உணர்ச்சிவசப்பட வைக்கும் விவகாரங்கள் என்கிறபோது விரைந்து செயல்படும் வழக்கம் உள்ளவர் காலிட்.
“இப்போது மட்டும் ஏன் இந்த மாறுபாடு?”, என்றவர் வினவினார்.
இந்துக்களை இழிவு படுத்திய விவகாரத்தில் மலேசிய இந்திய அரசியல் மற்றும் அரசு சார்பற்ற இந்து இயக்கங்கள் எப்படி மேலோட்டமாக கண்டனம் தெரிவித்த்தீர்களோ அதேபோல் இவரும் மேலோட்டமாக ஏதும் சொல்லுவார். அவ்வளவுதான்.
சில பிரச்சனைகளில் நமது போலிஸ் தலைவருக்கு கண்ணும் தெரியாது, ; காதும் கேட்க்காது !
மேலோட்டமாகக் கூட சொல்ல மாட்டார்! ஆண்டவனுக்கு நேர் கீழ் உள்ளவரை எந்தச் சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது!
அவனின் தூக்கம் களைய பல காலம் ஆகலாம். இவனெல்லாம் IGP . அரைவேக்காடுகள் பின்பக்க வழி பதவிக்கு வந்தால் வேறு என்ன நடக்கும்?