பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உகாண்டா சர்வாதிகாரி இடி அமினைப் போன்றவர் என்று வருணித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை போலீசார் விசாரணை செய்கிறார்கள்.
இதனை உறுதிப்படுத்திய மகாதிரின் வழக்குரைஞர் புத்ரா ஜெயாவில் உள்ள பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளை அலுவலகத்தில் விசாரணை இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
1971-இலிருந்து 1979வரை உகாண்டா அதிபராக கொடுங்கோல் ஆட்சி புரிந்தவர் இடி அமின். அவரது ஆட்சியில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன, ஊழல்கள் மலிந்திருந்தன, கொலைகள் சாதாரணமாக நடைபெற்றன.
நஜிப்போ, அம்னோவோ அல்லது BN அரசாங்கமோ, மாமா மகாதீரின் ஒரு “உரோமத்தை”-க்கூட தொட முடியாது என்பதற்கு “அல் ஜஸீரா” தொலைக்காட்சி பேட்டியே ஒரு உதாரணம்.
சந்தேகம் ஹிட்லர் யாராக இருக்கும் ??????
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உகாண்டா சர்வாதிகாரி இடி அமினைப் போன்றவர் என்றுதான் வருணித்தார் மாமா மகாதீர்.
ஆனால் போலீஸ் இடி அமின் ஆட்சியில் :
(i) மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன ;
(ii) ஊழல்கள் மலிந்திருந்தன ;
(iii) கொலைகள் சாதாரணமாக நடைபெற்றன
என வகைபடுத்தி, பிரதமர் நஜிப்பை எதனுடன் ஒப்பிட போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி ?