பூச்சோங் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் செயலல்ல ; அது குண்டர் கும்பல் சச்சரவுடன் தொடர்புடையது என்று போலீசார் வலியுறுத்துகிறார்கள்.
“ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த எண்ணியிருந்தால் அதற்குப் பக்கத்திலேயே இன்னொரு கேளிக்கை விடுதி இருக்கிறது, அப்போது அங்கு 80, 90 வாடிக்கையாளர்கள் இருந்தனர், அதுதானே அவர்களின் இலக்காக இருந்திருக்கும்?”, என சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் அப்துல் ரகிம் ஜப்பார் வினவினார்.
மோவிடா கிளப்பில் இருபதுக்கு மேற்பட்டோர் ஸ்பேய்னுக்கும் இத்தாலிக்குமிடையிலான கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அதில் எண்மர் காயமடைந்தனர்.
அதை ஒரு குற்றச்செயல் என்று வருணித்த ரகிம், இது போன்ற குண்டர் கும்பல் தாக்குதல்கள் முன்பும் நடந்திருப்பதாகக் கூறினார்.
அந்த விடுதியின் உரிமையாளர் ரோஜர் ஹியு, அங்கு தங்கள் திருமண இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட வந்திருந்த இந்திய தம்பதிகள்தான் தாக்குதல்காரர்களின் இலக்கு என்பது தொடக்கநிலை விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாகக் கூறினார்.
போலீசின் KALAH TAKPA ACTION MAU என்கிற போக்கினால்தான் இன்று நடக்கின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.இவனுங்களே பக்கத்திலும் போடச் சொல்லுவானுங்கப் போல.
இது போன்ற குண்டர் கும்பல் தாக்குதல்கள் முன்பும் நடந்திருப்பதாக கூறி திசை திருப்புகிறார்களோ என எண்ண தோன்றுகிறது. தாக்குதல் நடந்த கேளிக்கை மையத்தில் போலீஸ்காரர்கள்தான் காற்பந்து ஆட்டத்தை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று தவறுதலாக தாக்குதல் நடத்தியிருப்பார்களோ என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளலாமே.
காவல் பெயர் அளவில் தான்–அதிகப்படியாக அம்னோ தலைகளின் ஆணைக்காக காத்திருப்பன்கள்– எவனை பிடித்து உள்ளே வைக்கலாம் என்று. இது தான் ஜன(பண)நாயகம்.