பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மலேசிய ஊழல் எதிரிப்பு ஆணயத்தால் (எம்எசிசி) இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
குவான் எங் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் நாளை காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் அவரின் தந்தையும் டிஎபியின் மூத்த தலைவருமான லிம் கிட் சியாங் டிவிட் செய்துள்ளார்.
குவான் எங் ஜியோர்ஜ் டவுன் செசன்ஸ் நீதிமன்றத்தில் எம்எசிசி சட்டம் செக்சன் 23 மற்றும் குற்றவியல் சட்டம் செக்சன் 165 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாலான் பின்ஹோர்னில் அமைந்திருக்கும் அவரது வீட்டை ரிம2.8 மில்லியனுக்கு விற்ற வணிகப் பெண் பாங் லி கூனும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
முதலமைச்சரின் ஆதரவாளர்கள் ஜாலான் சுல்தான் அஹமட் ஷாவில் இருக்கும் எம்எசிசி கட்டடத்தின்முன் மெழுகுவர்த்தி விழிப்பு நிலை அனுசரிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
எல்லாம் ஆரவாரத்தோடும் அமர்க்களத்தோடும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! கடைசியில் பார்த்தால் ஒன்றுமிருக்காது!
திருடர்கள் ஆட்ச்சியில் அனைவரையும் திருடர்களாகவே கணக்கிடப்படும்
நன்றி வணக்கம்
காக்காத்திமிர் ஆரம்பித்து வைத்த அடக்குமுறை வெற்றிகரமாக நடைபெறுகின்றது– ஆட்சியையும் அதிகாரத்தையும் என்றுமே விடாமல் அவன்கையிலேயே வைத்திருக்க அல்தான் தூயா ??? அதிரடியில் இறங்கிவிட்டான்.
இந்த நாடகம் எதிர் பார்த்த ஒன்று .
PAHANG முப்தி “KAFIR HARBI” என்று கூறிய பிறகு, பூச்சோங் கேளிக்கை விடுதிகளில் குண்டுவெடிக்கிறது, ஒரு மாநில முதலமைச்சர் கைது செய்யப்படுகிறார். அனைத்தும் முப்தியின் பேச்சை திசை திருப்ப BN அரசாங்கம் நடத்தும் கபட நாடகம் என மக்களுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்
“KH” BN தலைவர்கள்.