போலீசாரும் எம்எசிசி புடைசூழ பினாங் மாநில முதலமைச்சர் குவான் எங் இன்று காலையில் நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். மலேசிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் 2009 செக்சன் 23 மற்றும் குற்றவியல் சட்டம் செக்சன் 165 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறார்.
தமது பங்களாவை குவான் எங்கிற்கு விற்ற வணிக பெண் பாங் லி கூனும் இன்று அதே செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.
காலை மணி 10.18 க்கு சட்டத்துறை தலைவர் (ஏஜி) நீதிமன்றம் வந்தடைந்தார். அங்கிருந்த குவான் எங் ஆதரவாளர்கள் “குவான் எங்கை விடுதலை செய், நஜிப்பை பிடியுங்கள்” என்று முழங்கினர்.
ஏஜி அப்பாண்டியுடன் குவான் எங்கின் வழக்குரைஞர் கோபிந்த் சிங்கும் ஏதோ பேசிக்கொண்டனர்.
பிகேஆர் தலைவர்களும் நீதிமன்ற அறையில் காணப்பட்டனர். அவர்களில் துணை முதலமச்சர் 1 ரஷிட் ஹாஸ்னன், சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் காசிம் மற்றும் மாநில பிகேஆர் தலைவர் மான்சூர் ஓத்மான் ஆகியோரும் அடங்குவர்.
குவான் எங்கின் குடும்பத்தினரும் அங்கிருந்தனர்.
பாங் லி கூனியும் அவரது வழக்குரைஞர்களும் நீதிமன்ற அறையில் இருக்கின்றனர்.
குவான் எங்கின் வழக்குரஞர்களான கோபிந் சிங், ராம்கர்பால் சிங், மு. குலசேகரன் மற்றும் ஆர் எஸ் என் ராயர் அங்கிருக்கின்றனர்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிமும் அங்கு இருக்கிறார்.
ஒரு தலைப் பட்ச ஜனநாயகம் வாழ்க! எதிர் கட்சிகளுக்கு இது ஒரு பாடம்.