பினாங்கு மாநில முதலமைச்சர் குவான் எங் மற்றும் பாங் லி கூன் ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் பினாங்கு ஜியோர்ஜ் டவுன் செசன்ஸ் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பின்னர், சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்பாண்டியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வழக்கை பினாங் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சம்மதம் தெரிவித்தார்.
இன்று காலை மணி 11.50 அளவில் பினாங் உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய குவான் எங் மற்றும் பாங் லி ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கில் இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்த விசாரணை கோரினர்.
வழக்கை செவிமடுத்த நீதிபதி அஸ்மி அரிப்பின் வழக்கு தொடர்பானவற்றை நிர்ணயிக்க செப்டெம்பர் 22 ஐ அறிவித்தார்.
குவான் எங்கிற்கு ரிம1 மில்லியன் பிணையுடன் ஒரு நபர் ஜாமின் விதிக்கப்பட்டது.
பான்கிற்கு ரிம200,000 பிணையுடன் ஒரு நபர் ஜாமின் விதிக்கப்பட்டது.
இத்துடன் நீதிமன்றம் கலைந்தது. குவான் எங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.
விசாணை முடிவதற்குள் மத்திய அரசாங்கம் மாறிவிடும். காலம் மாறும் பொழுது கருத்தும் மாறிவிடும்.
இந்த நாடு எந்த பாதையில் எதை நோக்கி போகிறது எல்லாருக்கும் தெரியும் ஆனால் ஒன்றும் நடக்காது– பெரும்பாலான மலாய் முஸ்லிம் ஆதரவு PAS – AMNO இருக்கும் வரையில். அது என்றும் மாறாது காரணம் அவன்களுக்கு எல்லாமே கொடுக்கப்படும். இதை எல்லாம் ஆரம்பித்து எல்லாவற்றையும் சீரழித்த காக்காத்திமிர் இன்று ஒன்றுமில்லா தலை. நல்லவர்களுக்கு என்றுமே காலமில்லை. எங்கு பார்த்தாலும் உண்மைக்கு இடமில்லை. ஆண்டவன் ஆகாசமதில் தூங்கு கின்றானே.
அத்துடன் இது அப்பட்டமான பழிவாங்கும் படலம். நீதி தேவன்கள் அம்னோ குஞ்சுகளாக இருக்கும் பட்சத்தில் எனது அனுதாபங்கள் லிம் எங் குவானுக்கு. உண்மைக்கு பாடு பட்டவனை ஓர் ஆண்டு அடைத்து வைத்தவன் காக்காத்திமிர் -அவனின் வழிவந்தவன் மட்டும் எப்படி இருப்பான்? சீ பேசவே எரிகிறது–இப்படியும் கேடு கேட்ட ஜென்மங்கள்– ஆண்டவனாம் ஆண்டவன்.
ந… ன் அராஜகம் வெகு விரைவில் இறக்கும் தருவாய் நெருங்கிவிட்ட்து எனலாம்
வேடிக்கையான தீர்ப்பு …?