அதிகாரிகள் அதிவேகமாகச் செயல்பட்டு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்மீது நடவடிக்கை எடுத்திருக்கும் விதத்தைச் சமூக அமைப்புகள் குறைகூறியுள்ளன.
அவ்விவகாரம்மீது தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டிருக்கும் பெர்சேயும் ஊழல் எதிர்ப்பு அமைப்பான சி-4ம், மற்ற ஊழல் வழக்குகளில், 1எம்டிபி ஊழல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரம் போன்றவற்றை விசாரிப்பதில் இவ்வளவு வேகம் காட்டப்பட்டதில்லை என்று குறிப்பிட்டன.
“அவை மீதான விசாரணைகள் ஈராண்டுகளுக்குமேல் ஆகியும் இன்னமும் முடிவுறவில்லை”, என பெர்சே கூறிற்று.
லிம், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளார் என்கிறபோது நேற்று அவரைக் கைது செய்ததும் கொம்டாரில் பெரும் எண்ணிக்கையில் போலீசாரைக் குவித்து “அச்சமூட்டியதும்” தேவையற்றது என்று அது கூறியது.
ஒரு வணிகப் பெண்மணியான பாங் லி கூன் கைது செய்யப்பட்ட விதமும் “கவலை அளிப்பதாக” அந்தத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டது.
“மாறாக, எம்ஏசிசி நீதிமன்றத்துக்கு வருமாறு முதலமைச்சருக்கும் பாங்கும் உத்தரவிட்டிருக்கலாம்”, என பெர்சே மேலும் தெரிவித்தது.
லிம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதை இரண்டுமே வரவேற்றன. அப்போதுதான் டிஏபி தலைமைச் செயலாளரான லிம், பங்களா வீடு வாங்கிய குற்றச்சாட்டுக்குப் பகிரங்கமாக பதிலளிக்க முடியும்.
லிம் தாம் குற்றவாளி அல்ல என்றால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் ஆனால், அதற்கு நம் நீதித்துறை அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என சி4 கூறியது. நீதிபதிகள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயல்பட வேண்டும் என பெர்சேயும் வலியுறுத்தியது.
இதனிடையே, அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் லிம் கைது செய்யப்பட்டது டிஏபி கைசுத்தமான கட்சி அல்ல என்பதைக் காண்பிப்பதாக நேற்று கூறியது தேவையில்லாத ஒரு கருத்து என்று பெர்சே குறிப்பிட்டது.
வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே பிரதமர்துறை அமைச்சர் முன்முடிவு செய்தது சரியன்று என அது கடிந்து கொண்டது.
அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் லிம் கைது செய்யப்பட்டது டிஏபி கைசுத்தமான கட்சி அல்ல …..
“அசுத்தத்தின்” மொத்த உருவமான BN அதிலும் குறிப்பாக UMNO “KH” அமைச்சர் “கைசுத்தத்தை” பற்றி பேசுவது நகைப்புக்குரியது.
“1MDB” ஊழல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நன்கொடை விவகாரத்தில் நிறைய ஆதாரங்கள் இருப்பதால் ஆமை வேகத்தில்தான் நகரும், இறுதியில் தண்டனை நிச்சயம் !
லிம் குவான் விவகாரத்தில் ஆதாரங்கள் இல்லாததால் குதிரை வேகத்தில் நகர்ந்தாலும், இறுதியில் விடுதலை நிச்சயம் !
“MACC” ஆமை வேகத்தில் மேற்கொள்ளும் பணிகள் இறுதியில் வெற்றியடைவதும், குதிரை வேகத்தில் மேற்கொள்ளும் பணிகள் இறுதியில் தோல்வியடைவதையும் பலமுறை நிரூபித்துள்ளதே !
ஆளுக்கொரு நீதி என்பதை இவர்கள் அறியாமல் அப்பாவித் தனமாக கேள்வி கேட்கின்றார்களே! வாழ்க அப்பன் ஆண்டி!
பல்வேறு ஆதாரங்களைக் கொண்ட 1MDB விசாரணை ஆமை வேகத்தில் நகர்வதேனோ?? நகர்கிறதா அல்லது குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டதா?
இந்த சூழ்நிலை உருவாகுவதற்கு முக்கிய காரணம் மகாதீர்தான். தன் ஆட்சியில் அடக்குமுறை கையாண்டதது இன்று அதன் தொடர்கதை ஆகிவிடடது.