பினாங் முதலமைச்சர் குவான் எங் பதவி துறக்கவோ விடுமுறையில் செல்லவோ வேண்டியதில்லை என்று பினாங் மாநில டிஎபி இன்று முடிவெடுத்துள்ளது.
இன்று காலையில் குவாங் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாடு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குவான் எங்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை. அதன் காரணமாக அவர் பதவி துறக்க வேண்டியதில்லை என்று டிஎபி மாநில குழு இன்று நடத்திய அதன் அவசரக் கூட்டத்தில் இம்முடிவை எடுத்தது.
தாம் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது விடுமுறையில் செல்ல வேண்டும் என்பது பற்றிய முடிவு எடுப்பதை கட்சியிடம் விட்டுவிடுவதாக குவான் எங் முன்னதாக கூறியிருந்தார்.
தே.மு. எதிர்பார்த்ததுபோலவே நடந்துகொள்கின்றனரே. நல்லதுதான். எந்த முகத்தை வைத்துக்கொண்டு நன்கொடைபற்றியும் ஊழல்பற்றியும் இனி வரும் காலங்களில் பேசுகின்றனர் என்று பார்ப்போம்.
“1MDB” விசாரணையின்போது நாட்டின் பிரதமரே பதவி விலகாமல் அல்லது விடுமுறையில் செல்லாமலும் கடைபிடித்த “முன்னுதாரணம்” தற்பொழுது எதிர்க்கட்சிகளுக்கும் உதவுகிறது.
விழக வேண்டியவனே பந்தாவா ஊர் சுற்றும் பொழுது,கடமையை செய்பவன் ஏன் விழக வேண்டும் ?
முதலமைச்சர் பதவி விலகுவதாலும் அல்லது பதவியில் நிலைத்திருப்பதினாலும் விசாரணைக்கோ அல்லது விசாரிப்போரின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித அதிகாரமும் கொண்டிருக்கவில்லை. ஆதலால், பதவி விலகுவதில் எப்பயனும் இல்லை.
பாருங்கய்யா, நாம விசாரிப்பவனுக்கும், குற்றம் சாட்டுபவர்களுக்கும் கொடுக்கும் மரியாதையை பதவியில் அமர்த்திய மக்களுக்கு கொடுப்பதே இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையை நடுவில் உட்கார வைத்துவிட்டு மகனை பதவி விலக சொல்ல அங்கே எந்தக் கொம்பன் இருக்கிறான். கர்பாலே சிம் கிட் சியாங்கிற்கு ஜால்ரா….