சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் அடைவுநிலைமீது மெர்டேகா மையம் நடத்திய ஆய்வில் மந்திரி புசார் நன்றாகவே செயல் படுகிறார் என்று பெரும்பாலோர் கருத்துத் தெரிவித்திருந்தாலும் மலாய், இந்திய வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில் சீனர்களில் 54 விழுக்காட்டினர் மட்டுமே அவர்மீது திருப்தி கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனாலும், சீனர்களில் 54 விழுக்காட்டினர் அஸ்மின்மீது திருப்தி கொண்டிருப்பது “அப்படி ஒன்றும் மோசமில்லை” என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கூறினார்.
“சீனர்களின் ஆதரவு (மலாய்க்காரர்களுடனும் இந்தியர்களுடனும் ஒப்பிடும்போது) 10 விழுக்காடுதான் குறைந்துள்ளது. இதை நினைத்துக் கலக்கமடைய தேவவையில்லை.
“ஆனால், அவர் (அஸ்மின்) அவரது மதிப்பைக் கூட்டிக்கொள்ள கூடுதலாக வேலை செய்ய வேண்டும்”, என்பதை லாவ் ஒப்புக்கொண்டார்.
இந்த ஆய்வு அவர் (அஸ்மின்) “மேலும் கடுமையாக பாடுபட” ஓர் ஊக்குவிப்பாக அமைய வேண்டும் என்றாரவர்.
இண்டியன்களும் அதிருப்தி தெரிவிக்கலாம்!. சிலாங்கூர் ம.இ.க. PPP, IPF எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கின்றார்களா?
சிலாங்கூர் ம இ கா. பி பி பி.ஐ பி எப். இவர்களெல்லாம் தூங்கி எத்தனையோ மாமாங்கமாகி விட்டது இது பத்தாதுன்னு வேல் பூரியின் அறிக்கை ஒரு பக்கம் இவருடைய தகப்பனார் தானை தலைவர் மகாதிர்மாமா வுடன் சேர்ந்து கொண்டு ஆடிய ஆட்டம் இந்தியர்களுக்கு இழைத்த துரோகம் சொல்லி மாளாது மகன் மகா யோக்கியனைப்போல் அறிக்கை வேறு விடுகிறார் சூடு சொரணை இருந்தால் தானே!
எதிர் கட்சி சிலங்கோர் மாநிலத்தை ஆச்சி செய்ய ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை எந்த மேம்பாடும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை இந்தியர்களுக்கு என்று விசேஷமாக எதையும் காண வில்லை இவர்களும் பதவிக்கு அடித்து கொள்வதிலேயே காலம் போய் கொண்டிருக்கிறது !! மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் குப்பை மேடாக கிடக்கிறது !! சுத்தம் என்பது கேள்விக்குறியாகி விட்டது!! அந்நியர்களின் செட்டையும் அளவுக்கு அதிகமாகி விட்டது !! இந்தியர்களை விட அந்நியர்களின் என்னிக்கை கூடி விட்டது !! அடுத்த தேர்தலில் நமக்கு நிகராக அவர்களும் சட்ட மன்றம் கேட் பார்கள் !!
யார் சூரப்புலி என்பதனை விட, யார் மோசடிக்காரர், யார் கோடாலிக்காம்பு என்பதனை கவனிக்க வேண்டிய இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். எந்த ஆட்சியிலும் இந்தியர்களுக்கு சிறப்பாக எதுவும் கிடைக்க வில்லை, என்ற ஆதங்கம் நமக்கு இருக்கலாம், ஆனால் இந்தியர்களை சுமார் அரை நூற்றாண்டுகள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து வெளியேற்றி, அந்த இடங்களை மாட மாளிகையாக்கி கோடிக் கணக்கில் சம்பாதித்த கோணங்கிகளும் இப்போது இல்லை என்பதனை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அன்று 300 க்கு மேற் பட்ட இந்து ஆலயங்கள் உடைத்து நொறுக்கப் பட்டதுடன், நில மேம்பாட்டாளர்களும், தோட்ட உரிமையாளர்களும் முன் வந்து ஆலயங்களுக்கு கொடுத்த ஏக்கர் கணக்கான நிலங்களை எடுத்துக் கொண்டு வெறும் 10,000 சதுர அடி நிலத்தை, அதுவும் இண்டா ஓட்டர், தெனாகா நேசனல் மின்சார கோபுரங்களுக்கு அருகில் தமிழ்ப்பள்ளிக்கும் கோவிலுக்கு மாக ஒதுக்கும் அவல நிலை இப்போது இல்லை. இந்தியர்கள் வாழத்தான் எதுவும் செய்ய வில்லை, இறந்தபின் ஈம சடங்கை செய்ய ஒதுக்கப் பட்ட மரணசகய நிதியைக் கூட மோசடி செய்த பெருமை எல்லாம் ம.இ.கா, பிபிபி, கெராக்கானை கொண்ட பாரிசானையே சாரும் என்பதனை ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும்.