‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ லிம் குறித்து கீர் தோயோ

toyoபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்மீது  குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது  பற்றிக் கருத்துரைத்த  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  டாக்டர்  கீர்  தோயோ  “முற்பகல்  செய்யின்  பிற்பகல்  விளையும்”  என்பார்களே  அது  இதுதான்  என்றார்.

“நான்  சிறைக்கு  அனுப்பப்பட்டதைத்  தனக்குக்  கிடைத்த  மிகப்  பெரிய   வெற்றியாக  டிஏபி  கொண்டாடியது.

“லிம் குவான் எங்  நிலை  கண்டு  நான்  இரக்கப்படுகிறேன். ஆனால்,  பார்டி  சிந்தா  உதவித்  தலைவர்  ஹுவான் செங்  குவான்தான்  ‘இது  அவர்களுக்கு  வேண்டியதுதான்’  என்று   டிஏபி  குறித்து  மிகப்  பொருத்தமாக  சொல்லி  இருக்கிறார்”,  என  கீர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

கீர்  தம்  பதவியைப்  பயன்படுத்திக்கொண்டு  ஒன்பது  ஆண்டுகளுக்குமுன்  ஒரு  நிலைத்தையும்  பங்களாவையும்  வாங்கினார்  என்று  குற்றஞ்சாட்டப்பட்டு  ஓராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டது.

ஆறு  மாதங்கள்  காஜாங்  சிறையில்  இருந்த  அவர்  மார்ச்  29-இல்  பரோலில்  விடுவிக்கப்பட்டார்