‘அம்னோ என்றால் குவான் எங் எல்லாப் பதவிகளையும் இழந்திருப்பார்’

nohபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  மட்டும்  அம்னோ  உறுப்பினராக  இருந்தால்  ஊழல்  குற்றம்  சாட்டப்பட்டவுடன்  கட்சியிலிருந்தும்  அரசாங்கப்  பதவிகளிலிருந்தும்  இயல்பாகவே  இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பார்.

புதிதாக  நியமிக்கப்பட்ட   வீடமைப்பு,  நகர்ப்புற  நல்வாழ்வு  மற்றும்  ஊராட்சி  அமைச்சர்  நோ  ஒமார்  இவ்வாறு  கூறினார்.  அம்னோ  சட்டத்தை  மதிக்கும்  கட்சி  என்றாரவர்.

“உங்களுக்குச் சட்டப்  பிரச்னை  இருந்தால்  நீதிமன்றத்தில்  அதற்குத்  தீர்வு  காணுங்கள்.  எங்கள்  தலைவர்கள்  நீதிமன்றத்தில்  நிறுத்திக்  குற்றம்  சாட்டப்பட்டால்  அவர்கள்  எல்லாப்  பதவிகளிருந்தும்  இயல்பாகவே  நீக்கப்படுவார்கள்.

“நாங்கள்  சொன்னதைச்  செய்வோம். ஆனால்,  அவர்கள் (டிஏபி)  வேறு  மாதிரி”, என  நோ  மலேசியாகினியிடம்  கூறினார்.