டிஏபி பினாங்கு மாநிலத்தை ஆட்சி செய்தாலும் முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குப் பிணைப்பணம் கட்டுவதற்கு டிஏபி-யிடம் காசில்லை. அதனால்தான் அது நன்கொடை கேட்டுப் பொதுமக்களிடம் செல்கிறது.
“பொதுமக்களின் அன்பளிப்புகளையும் நன்கொடைகளையும் நம்பியுள்ள ஒரு கட்சிக்கு ரிம1 மில்லியன் சிறிய காசல்ல”, என புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபவ் சிம் அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
2008-இலிருந்து டிஏபி பினாங்கில் ஆட்சி செலுத்தினாலும் அது தன் செலவுகளுக்கு மக்களின் நன்கொடைகளைத்தான் நம்பியுள்ளது. அரசுப் பணத்தை அது கட்சிக்கு[ப் பயன்படுத்திக் கொண்டதில்லை என்றாரவர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ரிம2.6 பில்லியனைக் கொடுப்பதற்கு சவூதி அராபியாவில் ஆள்கள் இருக்கிறார்கள். டிஏபிக்கு அப்படி அள்ளிக் கொடுக்கும் அரபுக் கொடையாளர்கள் யாருமில்லை.
“அதனால் நாங்கள் மைலோ டின்களை ஏந்தி நன்கொடை திரட்டுகிறோம். அதைப் பார்த்து பிஎன் சிரிக்கிறது. சிரிக்கட்டும். நாங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்”, என்றாரவர்.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு .
அட! நஜிப்பிடம் சொன்னால் அரபு கொடையாளர் ஒருவரை ஏற்பாடு செய்வாரே!