நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், அடக்குமுறையில் இறங்கி விடுகிறார்களே என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.
“என்னிடம் நான்கு முறை போலீஸ் விசாரணை செய்து விட்டது. ஹரி ராயாவுக்குப் பின்னர் இன்னும் ஒரு விசாரணை காத்திருக்கிறது.
“இதை நான் பதிவு செய்த பிறகு மேலும் ஒரு விசாரணை வருவது உறுதி.
“மக்களாகிய நம்மைக் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்கத்தான் போலீஸ்.
“ஆனால், இப்போது நமக்குத் தொல்லை கொடுக்கவும் அழுத்தம் கொடுப்பதற்கும் போலீசே பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இது சரியா, தப்பா?”, என்று மகாதிர் தம் அகப்பக்கத்தில் வினவினார்.
இந்த நிலைமை வருவதற்கு உங்களுடைய பங்கு நிறைய உள்ளது.தமிழர்கள் மற்றும் மலேசியர்களை ஒன்றிணைத்து ஆட்சி செய்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.உன் மக்கள் என்று தூக்கி விட்டதன் விளைவு இன்று உங்களுக்கே ஆப்பு.
இடி அமின் என்ற சொல் வருவதற்கே வழிவகுத்து விட்டதே வருத்தப்படுகிறோம் .
உன் ஒவ்வொரு வினாடியும் நீயே செதுக்கியது…வாழ்த்துக்கள்!!!
முதலை வாயிலிருந்து படாது பாடுபட்டு இப்போது நயவஞ்சக குள்ளநரியிடம் சிக்கிக்கொண்டது இந்த நாடு!!!
‘உள்ளே’ இருக்கும் அன்வாருக்காக பெரிய அளவில் வீதி ஆர்ப்பாட்டக்காரர்கள் உடனிருந்தனர். ‘உள்ளே’ போகப் போகும் லிம் குவான் எங் கிற்கு ஓரளவாவது கூட்டம் சேர்ந்து துணை புரிந்தனர். அடுத்தக் ‘குறி’ நீங்கள் தான் என உயர் மட்ட ‘அரசியல் கிசு கிசு’. ஒரு பத்துப் பேரையாவது சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்ய இப்போதே தயார் செய்துக் கொள்ளுங்கள். ‘அரசு அன்றே கொள்ளும், தெய்வம் நின்று கொள்ளும்’. கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் காணும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளீர்கள். நன்றி.