லிம்முக்கான நன்கொடை மக்கள் மனமுவந்து கொடுத்தது, மர்மான வெளிநாட்டு நன்கொடையாளரிடமிருந்து அல்ல

limsdonationமாநில முதல்வர் லிம் குவான் எங்கின் போராட்டத்திற்காக மக்கள் வழங்கிய நன்கொடைகள் மக்கள் மனமுவந்து வழங்கியதாகும், மர்மமான வெளிநாட்டு நன்கொடையாளரிலிடமிருந்து பெறப்பட்டதல்ல என்று பினாங் அம்னோ துணைத் தலைவர் ரீஸால் மரைக்கான் நயைனா மரிக்கானுக்கு நினைவுறுத்தப்பட்டது.

லிம்மின் சமீபத்திய வழக்கிற்காக நன்கொடையளிக்கும் சுமையை மக்களுக்கு டிஎபி உண்டுபண்ணி இருப்பதாக ரீஸால் மரைக்கான் என்று கூறியிருப்பதில் உண்மை இல்லை, ஏனென்றால் நன்கொடை கொடுப்பதா இல்லையா என்பது மக்களின் விருப்பதைப் பொறுத்தது.

21 மணி நேரத்தில் பினாங் டிஎபிக்கு ரிம1 மில்லியனை மக்கள் நன்கொடையாக அளித்தது பினாங் மக்கள் முழுமையாக லிம்மின் மீது அனுதாபமும் பரஸ்பரச் சார்புடைமையும் கொண்டிருப்பதை காட்டுவதாக டிஎபி இளைஞர் பிரிவு செயல்முறை செயலாளர் முகமட் ஷாகிர் அமீர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மக்கள் லிம்மை தற்காக்கிரார்கள் ஏனென்றால் தலைவர் மீது நடத்தப்படும் தாக்குதல் கட்சியைத் தாக்குவதாகும் என்று ஷா அலாம் மாநகர் மன்ற உறுப்பினருமான முகம்மட் ஷாகிர் மேலும் கூறினார்.

ஈவிரக்கமற்ற கடும் நடவடிக்களை பிஎன் மேற்கொண்ட போதிலும் மக்கள் டிஎபியின் பக்கம் சார்ந்திருக்கினறனர். அவர்கள் அம்னோவின் பொய் பித்தலாட்டங்களால் கவரப்படவில்லை என்றாரவர்.

லிம்மை பற்றி கொக்கரிப்பதை விட அம்னோவும் பிஎன்னும் அவற்றின் கொல்லைப்புறத்தை பார்க்க வேண்டும். முடிவில்லாத 1எம்டிபி ஊழல், தாபுங் ஹாஜி மற்று மாரா மோசடிகள் மற்றும் பொது நிதிகள் தவறாகப் பயன்படுத்தல் போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.