இரு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் பினாங் மாநில முதமைச்சர் குவான் எங் நற்பண்புவாய்ந்தவராக நடந்து கொண்டு விடுப்பில் செல்ல வேண்டும் என்று பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் ஹருன் டின் ஆலோசனை கூறியிருந்தார். ஆனால், இந்த ஆன்மீக தலைவர் ஹருன் ஏன் அம்மாதிரியான ஆலோசனையை நஜிப்புக்கு வழங்கவில்லை என்று பத்து கவான் அம்னோ முன்னாள் துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹருன் டின்னும் நற்பண்புவாய்ந்தவராக நடந்து கொண்டு 1எம்டிபி விவகாரம் மற்றும் ரிம2.6 மில்லியன் நன்கொடை ஆகியவை தீர்க்கப்படும் வரையில் நஜிப்பும் விடுப்பில் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விட வேண்டும் என்று கைருடின் அபு ஹசான் கூறினார்.
“ஏன் ஹருன் டின், லிம்முக்கு மட்டும் ஆலோசனை கூற வேண்டும்? நஜிப் நற்பண்புடையவராக இருந்தால் அவரும் அதைச் செய்யுமாறு கூறுவதற்கான தைரியத்தை அவர் பெற்றுக்கவில்லை”, என்று கைருடின் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.
“உலகின் மாபெரும் நிதி ஊழலால் சூழப்பட்டிருக்கும் நஜிப் அவரது பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் நீக்கப்படும் வரையில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
“நஜிப்பின் ஊழல் பற்றி அவரின் (ஹருனின்) நிலைப்பாடு என்ன? ஏன் ஹருன் டின்னும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் மௌனம் காக்கின்றனர்”, என்று கைருடின் அபு ஹசான் கேட்கிறார்.
கைருடின் அபுஹசான் நீ முந்தைய அம்னோக்காரன் உனக்குத்தான் நான்றாக தெரியும் ஏன் நாஜிபு அல்தான்தூயா விடுப்பில் செல்ல கூறு கெட்ட PAS கம்மனாட்டி சொல்லவில்லை என்று.