பெட்டாலிங் ஜெயா, கம்போங் துங்குவைச் சேர்ந்த ஒரு 76 வயது முதியவர் வாட்ஸ்அப் சேட்டில் பிரடமர் நஜிப்பை அவமதிக்கும் ஒரு படத்தை பகிர்ந்து கொண்டதற்காக இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் நீதிமன்றம் ஒன்றின் துணை பதிவாளர் நோரிடாயா அப்துல் மானாப் அம்முதியவரை செவ்வாய்கிழமை வரையில் தடுப்புக் காவலில் வைக்க அனுமதியளித்தார்.
அம்முதியவர் இனிப்பு நீர் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் லாக்அப் கருஞ்சிவப்பு சீருடை அணிந்திருந்த அம்முதியவர் காலை மணி 10க்கு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
அம்முதியவரை கம்போங் துங்கு, பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்ததாக ஜோகூர் போலீஸ் தலைவர் வான் அஹமட் நாஜ்முடின் முகமட் கூறினார்.
மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக சட்டம் 1998, செக்சன் 233 கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அச்சட்டத்தின் கீழ் ரிம50,000 மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சமாக ஓர் ஆண்டு சிறை தண்டணை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.