பினாங்கு ஆட்சிக் குழு, வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் லிம் குவான் எங் பதவி விலகவோ விடுப்பில் செல்லவோ வேண்டியதில்லை என இன்று ஏகமனதாக முடிவு செய்தது.
அதன் முடிவை துணை முதலமைச்சர் முகம்மட் ரஷிட் I ஹஸ்னோன் இன்று காலை அறிவித்தார்.
“இதை நான் முன்மொழிந்தேன். துணை முதலமைச்சர் II பி-இராமசாமி வழிமொழிந்தார்.
“முதலமைச்சர் தலைமையில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது”, என்றாரவர்.