பாகோ தொகுதி அம்னோ உதவித் தலைவர் ஷாருடின் முகம்மட் சாலே பதவி விலகியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
அவரது பதவிவிலகல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
ஆனால், ஷாருடின் ஜாராக் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார்.
பாகோ அம்னோவுக்கு முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் முன்பு தலைவராக இருந்தார். முகைதின் ஜூன் 24-இல் கட்சி நீக்கம் செய்யப்பட்டார்..